முனி-3 படப்பிடிப்பில் லாரன்ஸ்க்கு பலத்த காயம்!

LawrenceRaghavendra-E-முனி-3 படப்பிடிப்பில், பாடல்காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது தடுமாறி விழுந்ததில் நடிகர் லாரன்ஸ்க்கு பலத்த அடிபட்டது. முனி, காஞ்சனா படங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமாக க‌ங்கா(முனி-3)வை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்சி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான பாடல்காட்சி படமாக்கப்பட்டபோது லாரன்ஸ் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கழுத்து, கை மற்றும் மணிகட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் லாரன்சை மூன்று மாதம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தற்காலிகமாக முனி-3 படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அறிவுரையை ஏற்று 3 மாதங்கள் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன். முனி-3 படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துவிட்டது. விரைவில் நான் குணமாகி மீதி படத்தையும் முடித்து விடுவோம் என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.