ரஜி­னியை பாராட்­டிய ஷாருக் கான்

shah ruk khanஷாருக் கானுக்கு இந்­தியா மட்­டு­மின்றி, உலக அளவில் ஏரா­ள­மான ரசி­கர்கள் உள்­ளனர். இருப்­பினும், அவர், எப்­போதும் ரஜினி ரசி­க­ரா­கவே இருக்­கிறார்.

ரஜினி நடித்த  படங்­களை பார்த்து விட்டு, உட­னுக்­குடன், அவ­ருடன் கருத்து பரி­மாறி, தன் வாழ்த்­து­களை தெரி­வித்து வரு­கிறார்.

மேலும், தான் ரஜி­னியின் தீவிர ரசிகன் என்­பதை, மற்­ற­வர்­க­ளுக்கு தெரி­யப் ­ப­டுத்தும் வித­மாக, தான் நடித்த, ‘சென்னை எக்ஸ்­பிரஸ்’ படத்தில், ஒரு பாடல் முழுக்க,  ரஜி­னியின் புகழ் பாடும் வித­மாக, தீபிகா படு­கோ­னே­யுடன் ஆடிப் பாடினார் ஷாருக்.

இந்­நி­லையில், சமீ­பத்தில், ரஜி­னியின், ‘கோச்­ச­டையான்’ டீஸரைப் பார்த்த ஷாருக் கான், அசந்து விட்டார். இதை­அடுத்து, மும்­பையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘கோச்­ச­டையான்’ அனி­மேஷன் படத்தின் டீஸரைப் பார்த்து, ஒரு ரசி­க­னாக மெய் சிலிர்த்து விட்டேன்’ என்று பாராட்­டி­­இருக்­கிறார் ஷாருக் கான்.