சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? ………….(போகராஜா குமாரசாமி)

axதிரு. கீபா ரொனால்ட் கென்யா நாட்டின் சமூக தொழில் முனைவோர் – சமூக தொழில் முனைவோர் புதிய முறையில் பணம் சம்பாதிக்கவும் மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் முறை என்று கூறியுள்ளார்.

 சமூக தொழில் முனைவோர் என்றால் யார்?

சமூக தொழில் முனைவோர் சமூகத்தின் மிக இன்றியமையாத சமூக பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை செயல் படுத்துவார்கள். அவர்கள் கொண்ட லட்சியம் மற்றும் தொடர்ந்து செயலாற்றுவதுடன்  பரந்த அளவிலான புதிய யோசனைகளை வழங்கி சமூகத்திலுள்ள பெரும் சிக்கல்களை தீர்க்க வழி காணுவார்கள்.

மாறாக சமூக தேவைகளை அரசாங்ம் அல்லது வணிக துறைகளுக்கு விட்டுவிட்டு. சமூக தொழில் முனைவோர் தீராத பிரச்சினையை கண்டறிந்து, அதற்கு மாற்று முறை தீர்வையும் கண்டு, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து, மக்களை விரைவாக புதிய தீர்வின் வழி புதிய வாழ்வுக்கு வழி காட்டுவார்கள்.

சமூக தொழில் முனைவோர் தங்களின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்கள். தாங்களின் வாழ்வில் தாம் சார்ந்துள்ள துறையில் மேம்பாட்டிற்கு உழைப்பவர். அவர்கள் தூர நோக்க சிந்தனையுடையவர்கள், எல்லா வற்றிற்கும் மேலாக தனது தூர நோக்க சிந்தனையின் நடைமுறை படுத்தும் செயல் திறமையினை பெற்றவர்களாகும். ஒவ்வொரு சமூக தொழில் முனைவோரும், தனது தூர நோக்க சிந்தனையினை மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் அறிமுகப் படுத்தவார்

தொழில் முனைவோர் மற்றும் சமூக தொழில் முனைவோர் இடையே என்ன வேறுபாடு உள்ளது?

தொழில் முனைவோரின் இறுதி நோக்கம் செல்வம் சம்பாதிப்பது. எனினும், சமூக தொழில் முனைவோர்க்கு, செல்வத்தை உருவாக்குவது வெறுமனே ஒரு இறுதி வழிமுறையாக உள்ளது. சமூக தொழில் முனைவோர் இலாபம் தேடும் தொழில் நிறுவனங்களில் பங்கேற்று அதன் வழி பெறும் இலாபங்களை ஒட்டுமொத்த சமூகமும் பயன் அடைய சமூக திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதாகும்.

ஏன் சமூக தொழில் முனைவோர்  தேவை அதிகரித்து வருகிறது?

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நிதி அழுத்தங்களினால் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சமூக பிரச்சினைகள் மோசமாகி இருக்கிறது, சமூக தொழில் முனைவோர் சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்படும் நிதி தாக்கத்தை குறைக்க வழிகாண முடியும்.

அதி வேகமாக வளர்ந்து வரும் தோற்றா நோய்களின் தாக்கத்திலிருந்து குறைந்த அளவான மக்களே போதுமான சுகாதார உதவியை பெறுவார்கள். நிதி சுமையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிய அளவு கல்வி வழங்கும் இயலாத நிலை, ஏழைகள் வேலைக்கும் மற்றும் வருவாய்க்காண வாய்ப்புகளுக்கு போட்டியிடும் நிலையால் மன அழுத்தங்கள் மற்றும் வன்முறை அதிகரிக்க கூடும். முன்னேற்றம் பின் தங்கும்,  அதோடு வறுமை கோட்டிற்கு வெளியே வந்தவர்களும் மீண்டும் வறுமை வாழ்விற்கு தள்ளப்படுவார்கள்.  அரசு, வணிக மற்றும் வீட்டு வரவு செலவு திட்டத்தை குறைப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு முயற்சிகள் ஆபத்துக்குள்ளாகலாம். பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காலக்கெடுவுக்கு உட்படுவதால், சமூக தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், ஆதரவை வழங்க தவறினால் பொருளாதார நெருக்கடியில் தீவிர தவறாகிவிடும்.

 சமூக தொழில் முனைவோரை விளக்க இரண்டு குறள்

அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் – 247)

பொருட் செல்வம் இல்லாதவர்க்க் இவ்வுலக இன்பம் இல்லாதது போல, அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்பம் இல்லை. – பேராசிரியர் – டாக்டர் மு.பெரி.மு இராமசாமி.

பொருளையும் அருளையும் வழங்கும் ஒரே தொழில் – சமூக தொழில் முனைவோர்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வக்கப்படும். (குறள் – 214)

சமுதாயத்தில் தானும் ஒருவன் என்பதை உணர்ந்து (பிறர்க்கு உதவி செய்து ) வாழ்பவன் உயிரோடு கூடி வாழ்பவன் ஆவான். அவ்வாறு வாழாதவன் செத்தாறுள் ஒருவனாக்க கருதப்படுவான். – பேராசிரியர் – டாக்டர் மு.பெரி.மு இராமசாமி.

சமுதாயத்தில் தானும் ஒருவன் என்பதை உணர்ந்து தானும் வாழ்ந்து பிறருக்கும் உதவி வாழ்பவரே சிறந்த சமூக தொழில் முனைவோர்.

ஆக்கம்

போகராஜா குமாரசாமி

கைப்பேசி – 017 6728689