இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை மாலை கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில், “காமன்வெல்த் மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னையாக கருதக் கூடாது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை’ என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆண்டாண்டு காலம் வாக்களித்த மக்களுக்கு அவர்கள் இனம்சார்ந்த கொள்கையில் ,தரம் தாழ்ந்து போனதால் ,கூப்பாடு தூரம் இருந்தும் ,காப்பாற்ற மனமில்லாமல் போனதால் எம்மினம் பிணக்குவியலாய் ,டெரக்கு
ஆண்டாண்டு காலம் வாக்களித்த மக்களுக்கு, அவர்கள் இனம்சார்ந்த கொள்கையில் ,தரம் தாழ்ந்து போனதால் ,கூப்பாடு தூரம் இருந்தும் ,காப்பாற்ற மனமில்லாமல் போனதால், எம்மினம் பிணக்குவியலாய் ,டெர்க்கு வண்டியில் போனதே ,நாங்கள் இனமாய் இருந்தும் காப்பாற்ற நாதியற்ற இனமாய் போனோமே ,நாம் வேறுபட்டு நிற்பதினால் ,இனம்காக்க தவறினோமே, மாற்றார் இழிவு படுத்தும் சான்றாய் போனோமே ,பிணவாடை அடங்கும்முன்னே ,காமன் வெல்த் மாநாடு என்று, இன அழிப்பு செய்தவருக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு செல்லும் இதயமற்ற கோமான்கள் ,நாம் ஒன்று பட்டு இருந்தாலே ,நாம் வென்றெடுக்கும் பாதை தெளிவாகும் ,தடைகளை அகற்றுவோம் ,விடைகளைக்கான்போம் ,ஈழத்தின் ஒரு வழிப்பாதையில் மிடுக்குடன் பயணிப்போம் , ஈழத்தாய் நம்மை அனைக்கட்டும்,வெற்றி நமதே [ மலரட்டும் தமிழ்ஈழம் ].
இவனும் தமிழ் இன துரோகிதான்…!!!