‘ஜெயம்’ பிரதர்ஸ் கூட்டணியில் நயன்தாரா!

ரவி என்கிற நடிகரையும், ராஜா என்கிற இயக்குனரையும் தமிழ்த்திரையுலகத்திற்கு கொடுத்த பெருமை ‘ஜெயம்’ திரைப்படத்தைச் சார்ந்தது.

ஜெயம் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு  அண்ணன் தம்பிகளான ஜெயம் ராஜாவும், ஜெயம் ரவியும் இணைந்து பல வெற்றிகளைக்கொடுத்தனர். இவர்களின் வெற்றிக் கூட்டணி தற்போது மறுபடியும் களமிறங்குகிறது.

AGS தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட ரயில்வே ஸ்டேஷன் செட் போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ராஜாவின் வேலாயுதம் ரிலீஸானபோதே இத்திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை சொல்லி ஜெயம் ரவியிடம் சம்மதம் வாங்கிவிட்டாராம் ராஜா.

ஜெயம் ரவி நடித்துக்கொண்டிருந்த திரைப்படங்கள் முடிந்துவிட்டதால் ராஜாவின் திரைப்படம் துவங்கப்பட்டுள்ளதாம். ராம்ஜி ஒளிப்பதுவி செய்யும் இத்திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் உட்பட பலர் நடிக்கிறார்கள். முன்னணி நடிகை, புதுமுக நடிகை என பலருடன் நடித்துவிட்ட ஜெயம் ரவி இத்திரைப்படத்தில் முதல்முறையாக நயன்தாராவுடன் ஜோடி சேர்வது குறிப்பிடத்தக்கது.