ரஜினிக்கு பாஜக பிறந்தநாள் வாழ்த்து

rajiniநடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 64-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை (டிச. 12) கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “64-ஆவது பிறந்த நாள் காணும் ரஜினிகாந்த், நீண்ட ஆயுள், நிரந்த ஆரோக்கியம் உள்ளிட்ட எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ அன்னை பராசக்தியை வேண்டுகிறேன். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரத்தை உணர்ந்த அவர், எதிர்காலத்தில் மக்கள் பணியாற்ற அன்னை பராசக்தி அருள்புரிய வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.