ஆஞ்சியோபிளாஸ்ட்டி – ஸ்டென்ட் சிகிச்சை செய்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவின் (69) உடல் நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மலேசியாவில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை திங்கள்கிழமை இளையராஜா பார்வையிட்டார். சிற்றுண்டி சாப்பிட்டபோது அவருக்கு தொடர்ந்து விக்கல் உண்டாகி, பின்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய÷இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு “ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதயத் தசைக்கு ரத்தத்தை விநியோகிக்கும் 3 கரோனரி ரத்தக் குழாய்களில், ஒரு கரோனரி ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. நலமுடன் உள்ள போதிலும் இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் இளையராஜா ஓய்வெடுத்தார். குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இளையராஜாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
இளையராஜாவின் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கடா ? தில்லு முள்ளு கார பயல்கள .இளையராவின் TICKET விலைபோகவில்லை என்ற காரணத்தால் இந்த நாடகம் ஆடுகிரீர்களா ???இது போன்ற நாடகங்களை நான் பார்த்து அனுபவ பற்றிக்கிறேன் ,,இளையராஜா நிகழ்ச்சி அன்று வர வில்லை என்றால் ,,,!! ரகளைதாண்டா மவனே …..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இளை{தை}யராஜா வின் இசை நிகழ்சியை குத்தகை எடுத்துள்ள மின்னலுக்கு இடியா?அடியா?
இளைய ராஜ இன்று பூரண நலம் பெற்று நாளை நல்ல ஆரோகியடுடன் மலேசியா வந்து, நிகழ்ச்சியும், அமோகமாக நடை பெற வேண்டும். அவரின் இசை தொண்டு இன்னும் பல்லாண்டு செவ்வனே செயல் உருவம் பெற வேண்டும்! இதுவே உலக தமிழ் மக்களின் அவா. ஆசை!