பரதேசிக்கு பிறகு அதர்வாவின் சினிமா பயணம் புது மாதிரியாகி விட்டது. மற்ற இளம் ஹீரோக்களைப் போல், காதல், காமெடி என, நடிக்க விரும்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதைகளில் கவனம் செலுத்துகிறார். இரும்புக்குதிரை என்ற படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்துள்ள அதர்வா, அடுத்தபடியாக ஈட்டி என்ற படத்தில், தடகள வீரராக நடிக்கிறார். முழுக்க, முழுக்க ஓட்டப்பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்துக்காக, சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம், ஒரு மாதம் ஓட்ட பயிற்சி எடுத்த அதர்வா, தடகள வீரர்களுடன், சில மாதங்களாக பேசிப் பழகினாராம். அப்போது அவர்களின், நடை, உடை, பாவனைகளை தெரிந்து கொண்டாராம்.
சினிமா செய்திடிசம்பர் 25, 2013