புதுடில்லி : வீடுகள் இன்றி குளிரில் தவித்து வரும் சாலையோர மக்களுக்கு, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பழைய பஸ்களை வீடுகளாக மாற்றி தர உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
திறந்த வெளியில் வசிப்பவர்கள் இந்த பஸ்களை தற்காலிக முகாம்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்களில் போர்வைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும், இவற்றை பயன்படுத்தி வீடு இல்லாதவர்கள் இரவில் பாதுகாப்பாக உறங்கலாம் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.