ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல முறைனானதும் அல்ல என்றே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435ன் கீழ் குற்றவாளிகள் மத்திய அரசால் விசாரணை செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தால் அப்படிபட்டவர்களை விடுவிக்கும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இந்தியக் குற்றவியல் சட்டத்தைத் தவிர சட்டவிரோதமாக வெடிப் பொருட்களை வைத்திருந்தது, ஆயுதங்களை வைத்திருந்தது, கடவுச் சீட்டுச் சட்டம், அனுமதியின்றி இந்தியாவில் தங்கியிருந்தது, இந்தியன் வயர்லெஸ் டெலிகிராஃபி சட்டம் ஆகிய மத்திய அரசின் சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களிலும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தார்கள் எனவும் விஸ்வநாதன் கூறினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்த விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லும்போது, தமிழக அரசு அவர்களை விடுவிக்க முடிவெடுத்துவிட்டது, மத்திய அரசுக்கு மூன்று நாள் காலக்கெடு விதிக்கிறோம் என்று கூறுவது சரியல்ல, சட்டத்துக்கு புறம்பானது என்றும் இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஒரு வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரித்தால், குற்றவாளியை விடுவிப்பதற்கு முன்னர் மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
20க்கும் மேற்பட்ட raw உளவு துறை அதிகாரிகள் mossad சம்பளம் கொடுத்து இந்தியாவை வேவு பார்த்ததும் மட்டும் அல்லாமல் ராஜீவ் கொலை வழக்கில் நேரடி தொடர்பு உள்ளவர்களை ஏன் மத்திய அரசு சட்டம் கைது செய்ய வில்லை? தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
Pon Rangan wrote on 21 February, 2014, 8:32
நடுவண் சட்டம் பல குழப்பம் !? செல்வி செயல்லலிதாவுக்கு நன்றி
பாராட்டுவோம்.
ராஜிவை கொலை செய்தவர் அவருடன் மனித வெடி குண்டில் வீர மரணம் கொண்டார் என்பது உலக உண்மை. மரண தண்டனை மீறி கடந்த 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்பது உலக சட்டத்தில் கூட இல்லை.
உலக அரசியலில் எத்தனையோ தலைவர் சாவுகள்.அன்றைய பிரதமர் ராஜீவ் கொலை அது அந்த நாட்டின் பாதுகாப்பு ஏமாளி தனத்தைகாட்டுகிறது. தூக்கில் போடப்பட வேண்டியவர் பாதுகாப்பு அமைச்சர்.கொலையில் பக்க துணை என்ற conspiracy கூற்று நீதி மன்றதில் நிரூபிக்கப்படவில்லை.
இப்படி கையால் ஆகாத போலிஸ் துறை பலரை அநீதியாக கால வரையற்ற சிறை வைப்பு என்பது என்ன முட்டாள் சட்டம் என்று கேக்க தோன்றுகிறது.
சட்டம் படித்த காந்தி தன்னை சுட்டவனை ஒன்றும் செயாதீர்கள் என்றதால் அவன் இன்றும் குற்றம் அற்றவனாக செத்துப்போனான் என்று நினைக்கிறன். காந்தி குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாத ராஜீவ் நேருவின் கூட்டம் .
நீதிமன்றம் கொலை குற்றசாட்டில் இருந்து வெளியாக்கி மீண்டும் அதே நீதி மன்றம் தன் முடிவை மறுபடி குழப்பி உள்ளதும் அதற்கு ஒரு ராஜீவ் போரும் தமிழர்கள் மீது இவர்களின் துரோக உணர்வை காட்டுகிறது.
தமிழ் மாநில முதல்வர் செல்வி செயலலிதா அவர்களின் பல ஆண்டு முயற்சிக்கு கிடைத்துள்ள இந்த நல்ல தருணம் அவர் அன்றே இவர்களை விடுதலை செய்து இருக்க வேண்டும். பாதகமில்லை முதல்வரின் கடிதம் கிடைக்க வில்ல என்ற அண்டப்புளுகை யாரும் நம்ப தயாராக இல்லை….. தேர்தல் காலம் இப்பவாவது காங்கரஸுக்கு புத்தி வந்ததே என்று நினைத்தால் வங்காளி கோணல் பண்றான்.
உலக 12 கோடி தமிழர்கள் தமிழ் மாநில முதல்வர் முயற்சிக்கு நன்றி தெரிவிப்போம். தமிழரை வெல்லச செய்வோம். தமிழன் மாநிலப பெருமை காப்போம்.
தமிழர்களம் செய்திகள்
தமிழர்கள சொந்தங்களுக்கு ஓர் அறிவிப்பு!
தற்போதுள்ள சூழலில் களம் தமிழகத்தி்ன் பல்வேறு பகுதிகளில் கிளைபரப்பி வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. அது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆயினும். களத்தின் உறுப்பினர்கள் முன்பைவிட இன்னும் மிக வேகமாகவும் தெளிவாகவும், அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணிக்க வேண்டிய அவசியத்தையும் காலம் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
தலைமையின் உடன் மாநில அமைப்பாளரும் அவருடன் இருக்கும் நான்கு மண்டல செயலாளர்களும். அவர்களுடைய மாவட்டச் செயலாளர்களை நாள்தோறும் தொடர்பு கொண்டு அன்றாட பணிகளை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறை இருந்தாலோ அல்லது சந்தேகம் எழுந்தாலோ நேரடியாக கண்காணித்து வழிநடத்தவும் வேண்டும்.
மேலும் மாதந்தோறும் ஏதேனும் ஒரு வார இறுதியில் ஒவ்வொரு பகுதி வாரியாக கலந்தாய்வு கூட்டம், கருத்தரங்கம், புதியவர்களுக்கு அரசியல் பயிற்சி போ்ன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நிகழ மாவட்ட செயலாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும், மண்டல செயலாளர்கள் ஊடகப்பிரிவை மேம்படுத்துதல், ஏடுகள் நடத்துதல், திட்டங்கள் வகுத்தல், மாவட்டச் செயலாளர்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்!
மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த பகுதி செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து ஒன்றி அளவிலும், வட்ட அளவிலும் வார்டு அளவிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், சமூக பிரச்சினைகளை தீர்க்க எந்த சூழலிலும் போராட ஆயத்தப்படுத்துதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், அவர்களுக்கு களப் பயிற்ச்சியளிக்க மண்டலச் செயலாளருடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தல் போன்ற பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்!
மேலும், மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த பகுதிகளில் பெண்கள் அணி, தொழிலாளர் அணி, இளையோர் அணி, மாணவர்கள் அணி, வணிகர் அணி, உழவர் அணி, ஆசிரியர்கள் அணி, தமிழறிஞர்கள், தமிழாய்வாளர்கள் அணி, ஆகியவை நிறைவாக உருவாக்கப் பாடுபட வேண்டும். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களின் பட்டியல் விரைவாக மண்டலச் செயலாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும்!
தொழிலாளர் அணியில் அனைத்துவிதமான தொழில் செய்பவர்களையும் அமைப்பாக்க வேண்டும். மேலும், பனைத்தொழிலாளர் அமைப்பு, மீனவர் அமைப்பு, தானி ஓட்டுநர் அமைப்பு போன்ற அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முழுமனதோடு கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!
தமிழர்களமில்லாத ஊரில்லை என்ற நிலை உருவாக வேண்டும். களத்தின் செய்திகளை உடனுக்குடன் உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். களத்தின் வேர்கள் இதழை ஊர்தோறும் பரப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அறிஞர் குணாவின் ஆய்வுப் புத்தகங்களை களத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் படித்துத் தெளிய வேண்டும். திருக்குறளின் மேன்மையைப் போற்றவேண்டும். பின்பற்றவும் வேண்டும். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் புத்தகங்களை படிப்பதுடன் அவற்றை பரப்புரை செய்ய வேண்டும்.
ஆண்டுதோறும் தமிழறிஞர்களின் பிறந்தநாள் விழா, நினைவேந்தல் விழா ஆகியனவற்றை ஆசிரியர் அணியினைச் சேர்ந்தவர்கள் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாட வேண்டும்!
1800 ஆண்டுகால அடிமைத்தனம் என்பது வரலாற்றில் வேறெந்த இனத்திற்கும் நடந்ததாக வரலாறு இல்லை. மூத்த இனமான தமிழினம் மட்டுமே இன்னும் தாழ்வுற்றுக் கிடக்கிறது. இத்தாழ்வையும், தவிப்பையும், நீக்குதல் தமிழாய்ந்த தமிழரின் கடமைகள் ஆகும்.
காடு பற்றி எரியும்போது கனத்த மரங்களும்கூடச் சாம்பலாகிவிடும். நான் எனது என் குடும்பம் என்கிற குறுகி வட்டங்களை காப்பதற்காக நாடு பற்றிய கவலை இல்லாது போனால், இருப்பதையும் காப்பது இயலாது. உலக மாந்தனாய் உயர்வோம்.
பெற்ற தாயும், பிறந்த பொன்நாடும் நற்றமிழ் வானில் நனி சிறந்தற்றே! தாய்மை, தாய்நாடு, தாய்மொழியை போற்றுவோம்! தமிழர் நாடு தமிழருக்கே என்றாக்குவோம்!!
சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டைத் தடுப்போம். அதற்கும் நாமே எடுத்துக்காட்டாய்த் திகழ்வோம். மண்ணைக்காப்பாற்ற இன்னுயிரையும் ஈகம் செய்யத் துணிவோம்!!
– தமிழர்களம்