‘கோச்சடையான்’ படத்தில் மறைந்த நடிகர் நாகேஷையும் தொழில்நுட்ப உதவியுடன் நடிக்க வைத்துள்ளனராம்.
ரஜினின் இளையமகள், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. ஹாலிவுட் படம் அவதார் பாணியில், உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஆதி, நாசர், சோபனா, ருக்மணி என்று முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதனிடையே கோச்சடையான் படத்தில் மறைந்த நடிகர் நாகேஷையும் நடிக்க வைத்துள்ளனராம். அவர், ஒரு கதாபாத்திரமாகவே வருகிறாராம். உயிரோடு இருக்கும்போதே ஒரு நடிகருக்கு நடிப்பதற்கு சான்ஸ் கிடைப்பது அரிதாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு நடிகருக்கு மரணத்திற்கு பின்பும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்தான் நகைச்சுவை நடிகர் நாகேஷ். மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படத்தில் வேறொரு நடிகர் நடித்து அந்த நடிப்பை மட்டும் அப்படியே மோஷன் கேப்சர் செய்து நாகேஷின் பழைய படத்தில் உள்ள உருவத்தில் இணைத்து நடிக்க வைத்ததாக இயக்குனர் செளந்தர்யா தெரிவித்துள்ளார். இது கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று அவர் நம்புகிறார்.
கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் வரும் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு, இசையை வெளியிட போகிறவர், அமிதாப் பச்சன். மேலும் அன்றைய தினத்தில் வெளியிடப்படும் கோச்சடையான் டிரைலரில் நாகேஷ் நடித்த சில காட்சிகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது. இறந்த பிறகும் ஒருவரை புதிதாக பார்ப்பது இந்திய சினிமாவில் இதுவே முதல்முறை. நடிகர் நாகேஷ் ஏற்கனவே தில்லுமுல்லு உள்பட பல திரைப்படங்களில் ரஜினியோடு நடித்திருக்கிறார் என்பதால் அவர்கள் இருவரது நடிப்பை மீண்டும் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருப்பதாக கூறப்படுகிறது.
இவன் ரஜினி
இன்று நாளை
என்று சொல்லியே
மக்களை ஏமாதிரு
கிரண். அதுவும் தன் சாப்பாது களை நம் கண்முன்னே காட்டுவான் இந்த கன்னடக்காரன். தமிழன் தமிழ்நடுகரன் பால் அபிசேகம் செய்வான். முட்டாள்கள்.
கோச்சடையான் மாபெரும் வெற்றி பெரும் ….வாழ்துகள் தலைவா….
மோகன் அவர்களே..இன்று நாளை என்று எதை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் என்று சொல்லவில்லை??? கன்னடகறாராக இருந்தாலும்கூட நான் முதலில் தமிழன் என்ற வாக்குறுதி உனக்கு நினைவில்லையா…? பிடிக்கவில்லை என்றால் ரஜினி படங்களை பார்க்காதே! சும்மா கருத்து சொல்கிறேன் என்று முட்டாளை போன்று வேஷம் காட்டுவது சிறப்பல்ல!! தமிழனாக இருந்து நீர் என்ன செய்தாய்?? அதை யோசித்து பார்!!!
மோகன் நெத்தியடி … மலாய்காரன் தமிழ்பேசினால் அவனும் தமிழன்தான் ??? அசல் தமிழனோட கலாசாரமே சீரழிந்து சின்னாபின்னமாகிறது ??? தமிளரல்லாதவர்களின் சொர்க்கபுரி தமிழ் திரைத்துறை … தங்களின் நாத்தம்புடிச்ச கலாயரத்தை திராவிடர்கள் தமிழர்களுக்கு சினிமாவில் காம்பிச்சு தமிழினமே சீரழிந்து விட்டது ..எல்லாம் திராவிட மாயம் …
படம் வருது சொல்லி சொல்லி பல வருஷம் ஆட்சி ,,,,,,,,,,வந்த பாடில …………
இந்த வயதான நோயாளி ரஜனி தனக்கு dupe ஆக நடிக்க சரியான ஒருவரை தேடிக்கொண்டு இருகின்றராம் …அந்த ஆள் கிடைத்ததும் படம் வெளிவரும்
NALAM VIRUMBI அப்படி போடுங்க ,,குறை சொல்லியே இந்த மூதேவிகளுக்கு பழக்காமா போச்சி ,,மடையர்கள் ,சிந்திக்க தெரியாதவர்கள்