சமீபத்தில் நடந்த மோடி – விஜய் சந்திப்பு அரசியல் வட்டாரம் மற்றும் திரைத்துறையிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
நாடு முழுவதும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்துவருகிறார் .
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்த மோடியை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்தார்.
விரைவில் அரசியல் பிரவேசம் செய்யும் நோக்கத்திலேயே இந்தச் சந்திப்பு நடந்ததாக கட்சிகள் தரப்பிலும், சினிமாவில் தனது எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே என திரைத் துறையிலும் பேசப்படுகிறது.
முந்தைய படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் இப்போது, ‘கத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மோடி எப்படியும் பிரதமராகி விடும்பட்சத்தில், இங்கு அதிகாரத்தில் இருப்பவர்களால், பெரிய அளவில் பிரச்னைகளும் இருக்காது என்று கூறி, விஜயகாந்த் தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, வரும் 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, விஜய் இந்த சந்திப்பை பயன்படுத்திக்கொண்டார் எனவும் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், விஜயிடம் உங்கள் எதிர்கால கனவுகளுக்கு ஆதரவாக இருப்பேன் என மோடி கூறியதாக அறியப்படுகிறது.
இந்தியாவை இவனுங்களே குட்டியசுவராக ஆக்கிருவானுங்க போலிருக்கே
இந்தியாவை நாச படுத்த வெளியிருந்து ஆட்கள் வர தேவையில்லை.
அடுத்த பொருளாதார யுகம் சீனா மற்றும் இந்தியாவிடம்தான் இருக்கும் என உலகமே கூறியது. ஆனால் பொருளாதாரத்தில் சீனா எங்கேயோ போய்விட்டது. அந்த நாடு தயாரிக்காத பொருளே இல்லை. இந்தியாவோ கிழட்டு அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்களிலும் சினிமா நடிகர்களின் மாயையிலும் நடிகர்களின் போஸ்டருக்கு பால் ஊத்தும் ரசிகர்களின் மடத்தனத்திலும் ஊறிக் கிடக்கிறது.
திரு சரவணன் ராமசாமியின் கருத்து மிகச் சரியானது.
விஜய் எல்லாம் ஒரு மனுசனா? ரசிகர் மன்ற என்கிற பேருல மக்களை எப்படி ஏமாத்துரானுங்கனு பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இதுல அரசியல் வேற. மொத்தமா தமிழர்களை அமுக்கி போடலாம்னு திட்டம் போட்டனுங்க போல.
நடி பிறகு குடி அபோரும் படி அதன் Vijay
சரவணன் ராமசாமி, தங்களின் கருத்து மிக2 உண்மையான, பயனுள்ள கருத்து. சமூக நலன் கொண்டது. இதுபோன்ற கருத்துகளை அறிவுபூர்வமாக சிந்தித்து எழுதுபவர்களை நான் மிகவும் போற்றுகிறேன். இந்தியா நமது நாடு அல்ல, உண்மை. ஆனால் அது நமது மூதாதையர் நாடு. அந்தக்கேடு கெட்ட நாடு உலக அரங்கில், இன்று சீனா இருப்பதுபோல், உயர்ந்து நின்றால், அதனால் இங்கு நமது இனமும் மற்ற இரு பெரு இனங்களால் சற்று உயர்நிலையில் பார்க்கப்படும் (வேண்டும்) என்ற ஆதங்கமே. நடக்க முடியாத, தள்ளாடும் வயதிலும், அரசியல் பதவி ஆசை கொண்டு அலையும் வீணர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாதான். இந்தியா சீனா அளவிற்கு முன்னேற முடியாமைக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணி. இன்றுவரை பொது இடங்களை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கூட அறியாமல் மது, சினிமா, அரசியல் மோகத்தில் உழல்கின்றனர். தங்களின் பயன்மிகு கருத்துக்கு எனது நன்றி.
இந்தியர்களுக்கு நாட்டுப்பற்று என்பதே கிடையாது.ஜாதி மதம் நாணயமின்மை முட்டாள்கள் நிறைந்த நாடு. அங்கு யாருமே நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது–ஆனால் பதவியில் மட்டும் உட்கார்ந்து இருக்க வேண்டும் அத்துடன் அங்குள்ளோர் பெரும் பான்மையோர் கை நீட்டியே பழக்கம் — இன்னும் எவ்வளவோ– பணாம் அங்கு போனால் நம்மை விற்றுவிடுவான்கள் — 60 ஆண்டுகளில் என்ன சாதிதான்கள்? 30 தே ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பொருளியல் நாடு சீனா. இந்தியாவில் தினசரி மறியல் போராட்டம் வேலை நிறுத்தம் -எப்படி முன்னேற முடியும்?