வடிவேலு கடும் சோகத்தில் இருக்கிறாராம். என்ன விஷயம்?
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் அவர் முகம்காட்டிய படம் – தெனாலிராமன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தான் நடித்திருப்பதால், தெனாலிராமன் வெளியாகும் தினத்தில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் வடிவேலு.
அதன் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை கதாநாயகனாக ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருந்தார்.
இந்த எண்ணத்தின் அடிப்படையில், அடுத்து கதாநாயகனாக நடிப்பதற்கு தோதாக சிலரிடம் தனக்குப் பொருத்தமான கதைகைளையும் கேட்டு, அவற்றில் சில கதைகளை ஓகே பண்ணி வைத்திருந்தார்.
ஆனால், நடந்ததோ வேறு.
தெனாலிராமன் படத்துக்கு சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே அரங்கு நிறைந்தன.
பல தியேட்டர்களில் கூட்டமே இல்லை என்பது மட்டுமல்ல, ஓப்பனிங்கே இல்லையாம்.
சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் நிலைமை இன்னும் மோசம் என்று கேள்வி.
தெனாலிராமனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணி கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் வடிவேலு.
தமிழ் நாட்டில் கூட தெலுங்கர்களைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பது புரிகிறதா!
நண்பரே, இது மிகவும் பிழையான கருத்து. தெணாலிராமன் தோல்விக்கு தெலுங்கு மக்கள் சீற்றம் தான் காரணம் என்று கூறுவது நாமே அவர்களை தூக்கி உச்சத்தில் வைப்பதை போன்றது. தெணாலிராமன் இயல்பாகவே மிக பலகீனமான கதையைக் கொண்ட படம். வடிவேலுவிடம் மக்கள் எதிர்ப்பார்பது நகைச்சுவையை மட்டும்தான் என்பதை அவர் புரிந்து கொள்ள வில்லை. விகடன் தெணாலிராமனை புரட்சிக்காரனாக சித்தரித்த போதே படம் படுத்து விட்டது. ரசிகர்கள் தியேட்டரில் வலுக்கட்டாயமாக சிரிக்கும் நிலையில் தான் இருக்கின்றனர். யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாலும் இப்படம் தோல்வியைத்தான் தழுவி இருக்கும்.
அங்கு பேருக்குத்தான் தமிழ் நாடு. தமிழே பேச தெரியாமலிருக்கும் இவர்களை எப்படி தமிழர்கள் என்று கூறுவது?
தமிழ் நாட்டில் பேசுவது .எழுதுவது எல்லாம் தமிங்க்லிஷ் …இந்த அழகில் செம்மொழி அந்தஸ்து வேறு ஹி ஹி ஹி
தமிழனா அவன் இருக்கின்றானா
எல்லாமே வாய் கொழுப்புதான் ,அரசிவல் வாதியை மோதலாமா ,,,தமிழனுக்கு வாய் கொழுப்பு ,தமிழன் நண்டு