உ.பி. மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் : முலாயம் சிங்

உத்தர பிரதேச மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் சனிக்கிழமை தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 21 கோடி. இதனுடன் ஒப்பிடும்போது இந்த மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் குறைவாகவே உள்ளன. மேலும் மற்ற மாநிலங்களையும் விட உத்தரப் பிரதேசத்தில்தான் பலாத்கார சம்பவங்கள் குறைவு”என்று தெரிவித்தார்.

முலாயமின் இந்தக் கருத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு பாலியல் பலாத்காரத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து முலாயம் கூறுகையில், “”இளைஞர்கள் சில நேரங்களில் தவறு செய்வது இயல்பான ஒன்றுதான். இதற்கு மரண தண்டனை தேவையில்லாதது” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்தும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

TAGS: