விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அரிமா நம்பி.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார். டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்த இப்படம் 50 நாட்களை கடந்தும் ஓடிகொண்டிருக்கிறது.
இந்நிலையில் அரிமா நம்பி படத்தின் ரீமேக் உரிமையை பலத்த போட்டிக்கு இடையில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பெற்றுள்ளார். தெலுங்கில் விக்ரம் பிரபு கதாபாத்திரத்தில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும் பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் ஹன்சிகாவும் நடிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கிலும் இந்த படத்தை ஆனந்த் சங்கரே இயக்குவார் எனத் தெரிகிறது. பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளங்கிடும்