திரையில் மட்டும்தான் ரஜினிகாந்த் வேகமானவர் என நினைக்க வேண்டாம். திரைக்குப் பின்னும் ரஜினிகாந்தின் வேகம் ‘லிங்கா’ குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம். ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று திட்டமிட்டபடி முடிந்தது.
ரஜினிகாந்தின் ஒத்துழைப்பை மிகவும் ஆச்சரியமாகப் பார்த்து அதிசயித்துள்ளது படக் குழு. சில காலம் அவர் ஓய்வில் இருந்து வந்தாலும், மீண்டும் அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் இருந்ததுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.சமீபத்தில் படத்திற்காக ரஜினிகாந்த் 24 மணி நேரத்திற்குள்ளாகவே மொத்த படத்தின் டப்பிங்கையும் முடித்து விட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் டப்பிங் பேசிவிட்டாராம். போகும் போது ஏதாவது காட்சி சரியாக இல்லையென்றால் மீண்டும் வந்து பேசிக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாராம். ஆனால், அவர் முதலில் பேசியதே அவ்வளவு பர்ஃபெக்டாக இருந்தது என்கிறார்கள்.
‘படையப்பா’ படத்தில் வரும் ‘வயதானாலும் உன் வேகம் இன்னும் குறையலை’ என்ற டயலாக்கைத்தான் அவர்கள் ஞாபகப்படுத்திக் கொண்டார்களாம்.
சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த், சந்தானத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதிலிருந்தே இவ்வளவு இளமையாக இருக்கிறாரே ரஜினிகாந்த் என மற்ற இளம் ஹீரோக்கள் பொறாமையுடன் பேசிக் கொண்டதாகக் கூட கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மொழியை நீங்களும் உலக முழுவதிலும் பரவ செய்யுங்கள் .உங்களால் ஜப்பானில் தமிழ் பேச ஆசை படிகிரார்கலாம் ,ஜப்பான் காரர்களுக்கு உங்கள் அருமை பெருமை தெரிகிறது .ஜப்பான் ஒரு உலகிலேயே முன்னேற்றம் கண்ட நாடு .அங்கேயும் எங்கள் தமிழை புகழ் அடைய செய்தற்கு நன்றி .
ஒரே சீன்,னை 10,முறை ஒத்திகை பார்பது ஒன்னும் திறமை ஆகாது.சினமா,டாஸ்மார்க் இரண்டும் ஒழிந்தால் மக்கள் மயக்கம் தெழிந்து சிந்திக்க துவங்குவர்,நாடு வல்லரசாகும்,வாழ்க நாராயண நாமம்.
சினிமா ஒழிந்தால் தான் நாடு வல்லரசா ஆகுமா ???/ அப்படி என்றால் அமெரிக்காவில் சினிமாதான் முதல் இடம் என்று நினைக்கிறேன் அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனும் சினிமா பார்க்காமல் இல்லை ,அதிலும் அமெரிக்காவில் நல்ல சினிமாவும் ,அதிகமாக அந்தரங்க சின்னிமாவும் கோடி கட்டி பறக்குது ,அந்த அமெரிக்கா வல்லரசு நாடா ஆகா வில்லையா ??? முதலில் உங்க ஜாதி மதங்களை ஒலித்து கட்டுங்கள் அப்புறம் பாருங்கள் இந்திய வல்லரசு நாடா மாறும் .ஏன் மாறியே விட்டது ,சேவை கிரத்தின் மேல் இந்திய அனுப்பிய விகலம் வெற்றி நடை போடுகிறது தெரியவில்லையா ?
KAYEE நன்றி ,எனக்கு அறிவு கண்ணை திருந்து விட்டீர்கள் .மடையன்னா இருந்த என்னை அறிவாளியாக ஆக்கிவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி ,ஆமாம் ! அந்த காலத்திலேயே இந்த தியாகராஜா பாகவதரையும் ,கிட்டப்பாவையும் ,சிவாஜி கணேசனையும் ,MG ராமச்சந்திரனையும் ஒலித்து கட்டியிருந்தால் இன்று சினிமா இருதிருக்காது ,நாடு வல்லரசா மாறியிருக்கும் ,,மன்னிக்கவும் KAAYEE நான் ஆரம்பத்திலேயே தப்பு பண்ணிட்டேன் .அப்புற இந்த சினிமா இல்லாத காலகட்டத்தில் எந்த சினிமாவை பார்த்து ராவணன் சீதையை காட்டுக்கு கடத்தினான் என்று கேள்வி எழும்புகிறது ? ராமர் பாலம் ,அனுமான் கட்டிய பாலம் என்றெல்லாம் சொல்லுகிரர்ர்ககளே எப்படி ?மனித குரங்கில் இருந்து தான் வந்தான் என்கிறார்கள் எப்படி மனிதன் மீண்டும் குரங்கா மாறுகிறான் என்றுதான் புரியவில்லை ? அய்யானார் கையிலே கத்தி இருக்கிறது ,இது வன்முறையை தூண்டுவது போல் இருக்கிறது எந்த சினிமாவை பார்த்து இந்த ஐயனார் காப்பி அடித்தார் என்றுதான் புரியவில்லை ,சிகிரேட் பிடிக்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள் ,அது சரி ,சிகிரேட் கம்பெனியையும் இழுத்து மூட வேண்டியது தானே ,எந்த சினிமாவை பார்த்து சிகிரேட் கம்பெனி ஆரம்பிச்சார்கள் ???ஓஏறூ வேலை 1975 தில் இருக்குமோ ? ஏன்னா அந்த வருடத்தில் தான் ரஜினி சினிமாவில் நுழைந்தார் ! கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்ல முட்டையில் இருந்து கோழி வந்தான்னு தெரியவில்ல ,தலைய சுத்துது போங்கள் !
எவ்வளோவோ முக்கிய, சமூக செய்திகள் இருக்கையில் இது போன்ற உதவாக்கரை சினீமா செய்திகள் தேவையா…? சினீமா மாயையைக் குறைத்து கொள்வது சமூகத்திற்கு நல்லது. சினீமா sweets போன்றது; சாப்பிடுவதற்கு சுவை. அதையே அதிகம் சாப்பிட்டால் உடலுக்குத் தீமை.
kamapo ன்நன்றி ,உண்மைதான் நீங்கள் சொன்னது .சினிமா செய்தி என்று சொல்லப்போனால் இன்னும் உயர்ந்த இடத்தில உள்ள நடிகனை எல்லாரையும் குறிப்பிடலாம் .ஆனால் இங்கு குறிப்பிட்ட ஒரு நடிகனை மட்டும் போடும் காரணம் என்ன வென்று தெரியவில்லை ,இது ஒரு ந்காட்டுக்கு முக்கியமான செய்தி கிடையாது .இருந்தும் போடுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் ?? இதுதான் உசுப்பி விடுவது என்பது !தொட்டிலும் ஆட்டி விடுவார்கள் கிள்ளியும் விடுவார்கள் .நண்டையும் ஏற விடுவார்கள் அதை இழுத்து கிழேயும் தள்ளிவிடுவார்கள் ! யார் இந்த மாதிரியான வேலைகள் செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை .