மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தில்லியில் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேலில் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது அவர் நவம்பர் 6ஆம் தேதி அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு தலைவர்களும் இரு நாட்டு உறவு குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.