தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலரை சிங்கள கடற்படை கைது செய்தது.
இவர்களில் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்கள் மீது பொய்யான வழக்குகளைச் சுமத்தி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தூக்கு குறித்து நடிகர் கமல்ஹாஸனிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பிய போது, இதற்கு பதிலளித்த கமல்ஹாஸன், இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் எதுவும் இருக்காது.
இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும், மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்றும் இந்திய அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி 5 உயிர்களையும் காக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இல்லையென்றால், இங்கு அரசு என்ற ஒன்று இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை மோடி தடுத்து நிறுத்த வேண்டும் ,இல்லை என்றால் இலங்கையுடன் ராணுவ போர் நடத்த வேண்டும் ,அதுக்கும் துப்பு இல்லை இன்றால் அணைத்து தமிழ் நாட்டு தமிழர்களும் சிங்களவனை கொள்ள வேண்டும் ,முடியுமா ?? நன்றி கமல் ,
அடுத்தது பாருங்க கமல் ,,,,தமிழனுங்க இந்த மீனவர் பிரச்சனையை விட்டு ரஜினியை நோன்டுவானுங்க ,ரஜினி வாய் திறக்க வில்லை என்று ,முக்கியமான பிரச்சனையை கவனிக்க மாட்டானுங்க ,ரஜினியதான் நொண்டு நோன்டுன்னு நோன்டுவானுங்க
தெரிந்ததுதானே மோகன், கன்னடகரனுக்கு தண்டனை என்றல் ரஜினிக்கு வேர்க்கும், மாட்டியது தமிழன் தானே, அதனால்தான் கமலுக்கு வேர்க்குது.
2000 தில் ரஜினி தமிழர்கள் சார்பில் கன்னடத்துக்கு எதிர்ப்பா குரல் கொடுக்கும் பொது அந்த காலக்கட்டத்தில் அவர் படம் ஓடும்பொழுது அதே கன்னட காரர்கள் தியேட்டர்களையும் அவர் படங்களையும் ,அவர் உருவ போம்ப்பையையும் எரித்து ஆர்பாட்டம் செய்யும் பொழுது அதனை தமிலான்ட்டு தமிலனுங்க்களும் ரஜினி ரசிகர்களும் வாயை மூடிக்கிட்டுதானே இருந்தானுங்க ,தமிழ் நாட்டுக்கு குரல் ப்கொடுக்க போயி இறுதியில் அதே தமிழர்கள் அவருக்கு பிரச்னை என்றவுடுடன் வாயை திறக்கவில்லை !.வாழ்க தமிழர்கள்
கமல் தமிழன் என்று யார் சொன்னது ?????????
தமிழ் பெசுரவநேல்லாம் தமிழன் என்றால் தமிழ் மொழி யாருக்கு சொந்தம் ???
Thipori அவர்களே நன்றி
அரசாங்கம் வாய் திறக்க வேண்டும்….
கமல் தமிழ் பிராமின வகுப்பை சேர்ந்த தமிழன். சொந்த ஊர்ர் பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு. பறப்பது, ஓடுவது, நடப்பது, நிந்துவது, உருளுவது, ஊர்வது, அனைத்தும் சாப்பிடும் தமிழன்.
ஒரு சீனத்து பெண்ணுக்கு இருக்கும் தமிழ்ப் பற்று தமிழக பெண்களுக்கு வருமா?
தமிழர்களின் பண்பாடு கவர்ந்ததால் தமிழ் பேச கற்றுக் கொண்டேன்- சீன வானொலி பெண் தொகுப்பாளர் பேட்டி…!
‘தமிழர்களின் பண்பாடு என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன்’ என்று சீன வானொலியின் பெண் தொகுப்பாளர் பெருமையுடன் கூறினார். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தலைவராக இருப்பவர் சவோ ஜியாங் (36).
தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டதால், தனது பெயரை கலைமகள் என மாற்றிக் கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள இவருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடந்தது நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் கலைமகள் கூறியதாவது:
சீன நாட்டு வானொலியில் 1963-ம் ஆண்டு தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். தமிழ்ப் பிரிவின் பொன்விழா, கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எங்கள் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், செல்வாக்கும் கூடுகிறது.
தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. அதனால்தான் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு ஜனவரியில் ‘சீனாவில் இன்ப உலா’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். இதில் சீனாவைப் பற்றி எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தை தமிழ் நண்பர்கள் படிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூனில் ‘சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி’யை தொகுத்து வெளியிட்டுள்ளேன். இந்த அகராதியில் சுமார் 27 ஆயிரம் சொற்கள் உள்ளன. தமிழர்கள் சீன மொழியை படிப்பதற்கு, இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும்.
பாரதியாரை பிடிக்கும் எனக்கு மிகவும் பிடித்தவர் பாரதியார். சீனாவில் தமிழ் பேசும் மக்கள் குறைவு. சீன மக்களிடையே தமிழை கொண்டு செல்வதற்கான போதிய விளம்பரம் இல்லை. நான் பணியாற்றும் வானொலியின் தமிழ்ப் பிரிவு மூலம் சீன மக்களிடம் தமிழை கொண்டு செல்வேன். உலக அளவில் தமிழ் ஒலிபரப்பாளராக புகழ் பெற வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக கடுமையாக முயற்சி செய்வேன். 2002-ம் ஆண்டு தமிழகம் வந்தேன். அதன்பின், 10 ஆண்டுகள் கழித்து தமிழகம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சீனாவில் தமிழ்த் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. விரைவில் தமிழ் படங்களை பார்க்க முயற்சி செய்வேன். போதி தர்மன் கதையை மையப்படுத்தி வந்துள்ள 7-ம் அறிவு படத்தை விரைவில் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள், ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சவுசின் என்பவர் உடன் இருந்தார். இவரும் தமிழ் மீதுள்ள பற்றினால், தனது பெயரை ஈஸ்வரி என்று மாற்றிக் கொண்டார். இவர் புதுச்சேரியில் தங்கி தமிழ் படித்து வருகிறார். — with Arun Kumar Thangaraj.
தமிழ் இனி தழைக்கும்: அமெரிக்க குழந்தைளுக்கும் தமிழ் கற்றுத் தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம்!
சார்ல்ஸ்டன்(யு.எஸ்): தமிழ் மொழியை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். தமிழ் வரலாற்றில் மிக முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களுக்கு தாய் மொழியும், ஆங்கிலமும் தெரிந்திருக்கும்.
அதே போல் பெரும்பாலான லத்தீன் இனத்தவர்கள் ஸ்பானிஷும் ஆங்கிலமும் அறிந்திருப்பார்கள். சீனர்களுக்கு சீன மொழியும் ஆங்கிலமும் தெரியும். ஒரே மொழி அமெரிக்கர்கள் 1/9 ஒரே மொழி அமெரிக்கர்கள் ஆனால் அமெரிக்கர்களை ஒற்றை மொழியினர் (uniligual) என்று பரவலாக அழைப்பதுண்டு. அதாவது அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் (மொழியின் பெயரால் அங்கு சண்டை கிடையாது!)
முதற்கட்டமாக பள்ளியில் ஒற்றை மொழி அமெரிக்கர்கள் (Uniligual Americans) என்பதை தற்கால அமெர்க்கக் குழந்தைகள் விரும்புவதில்லை. கூடுதலாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதில் ஸ்பானிஷ் அல்லது சீன மொழிகள் தான் அவர்களுடைய முதல் தேர்வாக இருக்கிறது. தமிழ் மொழி குறித்து இவர்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. எனவே அமெரிக்க பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழ் மொழி, அதன் தொன்மையான சிறப்புகள் மற்றும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கும் முயற்சியை பனை நிலம் தமிழ் சங்கம் முன்னெடுத்துள்ளது. கூடவே கோலம் வரையவும், கும்மிப் பாடல்கள் பாடவும், வண்ணங்கள் பூசவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
250 அமெரிக்க மாணவர்கள் – வேட்டி சட்டையில் ஆசிரியர் ஆக்லே ஆல் பள்ளி மற்றும் பியூஸ்ட் அகாடமி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் பண்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் ஹரி நாராயணன் இந்த பாடங்களை நடத்தினார். நிகழ்ச்சியில் 250 அமெரிக்க மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். திருவள்ளுவர், திருக்குறள், தஞ்சை பெரியகோவில் மற்றும் இட்லி தோசை உட்பட தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றிய விவரங்களை, சில மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவும் செய்தார்கள். அத்தனை மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் ஹரி நாராயணன், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்து, வகுப்பெடுத்தார்.
இந்த செய்தியை பார்க்கும் போது தமிழை அமெரிக்கர்கள் வெகு விரைவில் கற்று விடுவார்கள் போல் தெரிகிறது . ஆனால் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தமிழை கற்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வேதனை.
– தூய தமிழ்ச்சொற்கள் — with Prince Prince and Jay Muni Jayamuniesvaran.
தமிழ் மொழி – உலக தாய் மொழி தினம்.
எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன் முதலியன சிலவாகும்.
சமஸ்கிருதமும், இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றது. தமிழ் மொழி தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது.
தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ் மொழியை பேசிய இனத்தோர் தமிழர் எனப்பட்டனர். தமிழ் மொழி வழங்கிய தேசம் தமிழகம், தமிழ் நாடு, திராவிடம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
தமிழ் நாட்டை பண்டைய நாளில் சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பாடுபட்டனர். தமிழ் மொழியை கற்று உணர்ந்த புலவர்களை பொன்னும் பொருளும் தந்து வாழ்த்தினர்.
தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்த தமிழ் இன்று மலேசியா, சிங்கபூர், இலங்கை, தென்னாபிரிக்கா,.. போன்ற பல நாடுகளில் வழங்கி வருகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் விரிவடைந்து விட்டது.
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது. இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழ் இசையுடன் இணைந்தது. நாடக தமிழ் கதை, கூத்து என்பன கலந்து வருவது.
பண்டைத்தமிழ் மன்னர்கள் மூன்று சங்கங்களை அமைப்பித்தனர். அவை, முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். இதன் மூலம் பல தமிழ் நூல்களை இயற்றினார்கள். இலங்கை நாட்டவரான ஈழத்துப்பூதன் தேவனார் கடைச்சங்க புலவருள் ஒருவர் ஆவர். அவர் நக்கீரர், கபிலர், பரணர் போன்று அறிய பாடல்களை எழுதிஉள்ளார்.
தமிழ் நூல் பரப்பு மிகவும் பறந்து பட்டது. “திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம்” என்பன அவற்றுள் சிலவாகும். பாரதியார்
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எங்காயினும் கண்டதில்லை”
என அறுதியிட்டு கூறியுள்ளார்.
மிக பிற்காலத்திலே நாவலர் பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர் தோன்றி தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாட்டினர்.
“நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?”
என்று சொல்லும் அளவிற்கு நாவலரின் தொண்டு அமைந்திருந்தது.
பாரதியார் புதுமை புரட்சிக்கு வழிவகுத்தார்.
இன்று பல்கலைகழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும் தமிழ் மொழியை பேணுவதில் ஈடுபட்டு வருகின்றன.
எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியை சான்றோர் தமிழ் தாய் என்றும் தமிழ் தெய்வம் என்றும் போற்றுவர். எங்கள் தமிழ் தாய் தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றாள் என்று கூறினால் அது மிகையாகாது.
****வாழ்க தமிழ் அன்னை****
udayakumar [ tamil nadu ] coimbatore வணக்கம் ,தமிழ் தமிழ் தமிழன் தமிழன் என்றெல்லாம் சொல்லுகிறீர்களே ,உங்கள் மறுபனுவை அறிவியலாரரிடம் ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கீறீர்களா ?? உங்கள் மருபணு 10000 வருடங்களுக்கு முன்பு எந்த நாட்டை சேர்ந்தது என்று ,அதாவது பரம்பரை! அடுக்கிக்கொண்டு பின்னோக்கி போனால் வெவ்வேறு நாடுகளில் இருந்து வெவ்வேறு உடல்களில் இருந்து இடம் பெயர்ந்து இன்று தமிழ்நாட்டிலோ அல்லது மலேசியாவிலோ ,அல்லது கலப்பு திருமணத்தில் ஏற்ப்பட்டதோ என்று தெரிய வரும் ,,,,,
இலங்கையில் தமிழன் படுகொலை செய்யப்படுகிறான். மீன் பிடிக்கச் செல்லும் தமிழன் சிறை பிடிக்கப்படுகிறான். நீருக்காக ஆந்திரா, கேரளா, ன்னட மாநிலத்துக்காரனிடம் தமிழ்நாட்டுத் தமிழன் போராடிக் கொண்டிருக்கிறான். வடநாட்டில் இருக்கும் தமிழன் இட்லி வாலா என கேலி செய்யப்படுகிறான். வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் தமிழன் வயிற்றுப் பிழைப்புக்காக மற்ற நாட்டுக்காரனிடம் அடிபட்டு உதைபட்டுக் கொண்டிருக்கிறான். இவ்வளவு அலவங்களுக்கு மத்தியிலும் நமது வீரத்தமிழர்கள் கூத்தாடிகளுக்கு கால் கழுவி விடுவதிலும் போஸ்டருக்கு பால் ஊற்றுவதிலும் சுகம் காண்கிறார்கள். கூத்தாடிகளுக்காக மானம், மரியாதை அனைத்தையும் விட்டு விட்டு தரையோடு தரையாக ஊர்ந்து செல்லக்கூடிய வினோத ஜந்துகள் என்றால் அது நம்மினத்துக்காரன்தான். இப்போது கூட பாருங்கள் மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியில் தேவையில்லாமல் ரஜினி என்ற ஒரு நடிகனுக்கு வக்காலத்து வாங்கி விவகாரத்தையே வேறு திசைக்கு கொண்டு போய்விட்டார் மோகன் என்ற ஒரு புண்ணியவான்.
கமலின் மகள் சுருதி ஹசன் தமிழச்சியா ?,இல்ல வடநாட்டு காரச்சியா ? அவர் யாரை கல்யாணம் செய்வார் என்று பார்ப்போம் ,அவருக்கு பிறக்கும் பிள்ளை சுத்த தமிழா என்று எதிகாலம் விடை சொல்லும்
தமிழர்களின் சரித்திரத்தை உலகம் தோன்றியதில் இருந்து சொல்ல போகோரீர்களா ? இல்ல முடிந்த 2000 ஆயிரம் ஆண்டுகளில் இருந்து தமிழர்களின் சரித்திரத்தை தொடங்க போகிறீர்களா ?
கமல் தமிழன் துடிக்கிது .
அப்படி போடுங்க மோகன்
மோகனுக்கு j
எத்தனை தசாவதாரம் பார்த்தீர்,பத்து அவதாரத்தில் தமிழனுக்கு கொடுத்த தோற்றத்தை, கேவலத்தை கண்டுமா இப்படி,எது கவுரவம் எது கேவலம் என்று பிரிக்க தெரியாது போனதை கண்டு பருதாபம் கொள்கிறோம்,சரியான அடையாலம் கருதினால்,யாம் மன்னிப்பு கேட்கிறோம்.வாழ்க நாராயண நாமம்.
திரு மோகன் அவர்களுக்கு ,தங்கள் கேள்வி தமிழ் யாருக்குச் சொந்தம் ,தமிழ் கற்கும் அனைவருக்கும் தமிழ் சொந்தமே ,தமிழ் பேசுபவர்களுக்கு ,தமிழ் சொந்தம் ,தமிழ் பாரப்புவர்களுக்கு தமிழ் சொந்தம் ,தமிழை யார் எல்லாம் மேன்மை படுத்துகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தமிழ் சொந்தமே ,அதன் கருத்து மட்டுமே மேலே உள்ளது ,[ மரபணு ] மற்றவரிடம் கேட்கும் வார்த்தையை என்னிடம் கேட்கலாமா ,தமிழை மேன்மை படுத்துங்கள் , தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தாருங்கள் ,மாற்றாரையும் மதியும் பண்புடையவன் நான் , மாற்றாரை தாழ்த்தி எழுதிய எனது ஆக்கம் எங்கேயும் கிடையாதே , வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் .
1,ஒரு சீனத்து பெண்ணுக்கு இருக்கும் தமிழ்ப்பற்று தமிழகபெண்களுக்கு வருமா . 2 தமிழ் இனி தழைக்கும் அமெரிக்க குழந்தைகளுக்கும் ,தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் . 3 எளிமை , இனிமை ,தொன்மை படைத்த தமிழ் மொழியை சான்றோர் தமிழ் தாய் என்றும் ,தமிழ் தெய்வம் என்று போற்றுவர் , எங்கள் தமிழ் தாய், தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றாள் என்று கூறினால் அது மிகையாகாது ,வாழ்க தமிழ் அன்னை , மோகன் அவர்களே , இதுவன்றோ கருத்து .