சென்னை, நவ. 7- நடிகர் கமலஹாசன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் கமல்.
சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை அவர் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கினார். அவரும், அவரது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் மேலும் 25 ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக இப்பணியை தொடங்கி வைக்கும்போது கமல் கூறினார்.
இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று மாலை 3 மணியளவில் கடற்கரை சாலையில், தூர்தர்ஷன் எதிரே உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்க உள்ளார்.
வாழ்த்துக்கள் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களுக்கு.
இன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடுங்குவதை வீட கேப்டன் பிரபாகரன் போல் துநிச்சலாகா ஒரு போர் படையை துவங்குங்கள் .தூய்மை திட்டம் என்று சொன்னால் ஏழைகளின் வயிர் நிறையாது கமல் சார் . எவனுக்கு வேண்டும் தூய்மை ,,தமிழனுக்கு தமிழ் ஈஎலம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்குங்கள் ,தூய்மை இந்தியா என்று சொல்லி சினிமா ஆதாயத்தை தேடாதீர்கள் ,.ஒரு முறை உங்களை பார்க்க 1982 டில் உங்கள் வீட்டுக்கு ( எப்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் கமல் வீடு ) அங்கு உங்களை பார்க்க வந்த பொது நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே நான் இல்லை என்று உங்கள் மேனேஜரிடம் சொல்லி அனுப்பியது இன்றும் என் காதில் ஒலிக்கிறது .உங்களின் பெருந்தன்மைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள விரும்புகிறேன் !!ஆமா நீங்க சுத்த மரதமிலனா சார் ??? இல்ல சும்மா கேட்டேன்
மோகன் சார் நான் கமல் ரசிகன் இல்லை.. ஆனா ஒரு தமிழனா சொல்றேன் எதுவுமே செய்யாம இருக்குறத விட எதாவது நல்லெ விசயமா செய்றது நல்லது தானே. விடுங்கள் அவரால் செய்ய முடிஞ்சதே அவர் செய்யட்டும்.