ஜூன் 21 சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு

TeenagerDoingYogaஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் பேசியபோது, யோகாவுக்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, யோகாவுக்கான சர்வதேச தினம் குறித்த தீர்மானத்தை ஐ.நா. சபையில் வியாழக்கிழமை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்துக்கு, 175 நாடுகள் ஆதரவளித்தன.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறுகையில், “நோய்கள் வராமல் தடுப்பதிலும், மனஅழுத்தம் வராமல் தடுப்பதிலும், மனத்துக்கு அமைதியைத் தருவதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்று பான்-கீ-மூன் தெரிவித்தார்.

மோடி வரவேற்பு: சர்வதேச யோகா தினத்தை ஐ.நா. அறிவித்ததற்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா.வின் அறிவிப்பால் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: