சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆய்வாளர் நீலகண்ட ஐயர் மலாயாவில் உள்ள இந்தியர்கள் துயரார்ந்த சமூகமாக உருவாக்கம் காண்பார்கள் என்றார். தொழிலாளர்களாக மட்டுமே காணி நிலம் கூட இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களை இந்தியா அந்நியப்படுத்தியதோடு மலாயாவும் அவர்களை ஓரவஞ்சனையுடன் நோக்கியதே அதற்கான காரணமாகும்.
அது இன்றும் எதிரொலிக்கிறது. ஒரு சிறுபான்மை சமூகமாக வாழும் இந்தியர்கள் காலனித்துவம் விட்டுச்சென்ற இனவாதமும் மதவாதமும் கொண்ட அரசியலால் பாதிப்படைந்து, நாட்டின் ஒட்டு மொத்த அரசியலிலும் பொருளாதாரத்திலும் பின்தள்ளப்பட்டு, ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக உருவாகி வருகிறார்கள்.
இந்த நூலில் முனைவர் கார்ல் வடிவேலன் பெல்லா இந்தியர்களின் நிலைமையை, காலனித்துவத்தில் தொழிலாளர்களாக வந்த காலம் தொட்டு புதிய நவீன மலேசியா வரையில், ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் காட்டுகிறார்.
இன்றைய மலேசியா உருவாக்கம் காண இந்தியர்கள் ஆற்றிய பங்கினையும், அதன் பின்னணியில் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் ஒப்பிடுகிறார்.
அண்மைய காலங்களில் உண்டான இந்தியர்களின் எழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியோடு ஒரு புதிய நம்பிக்கையைக் கொண்டிருப்பினும், இனவாத அடிப்படையில் உள்ள அரசமைப்பு முறை இந்தியர்களுக்குத் தேவையான தீர்வைத் தர இயலாது என்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த ஆய்வாளர்.
மொத்தம் 500-க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. Tragic Orphans – Indians in Malaysia என்ற இந்நூலை அறிமுகம் செய்து வெளியிடும் நிகழ்வில் முனைவர் லிம் டெக் கீ, முனைவர் எஸ். நாகராஜன், வழக்கறிஞர் கா. ஆறுமுகம் மற்றும் ஜானகிராமன் ஆகியோர் உரையாற்றுவார்கள். முனைவர் கார்ல் வடிவேலன் அவர்கள் சிறப்புரையாற்றுவார்.
கே.எஸ். சாந்து (1969) மற்றும் எஸ். அரசரத்தினம் (1970) போன்ற ஆய்வாளர்கள் இந்தியர்களின் நிலையை ஆய்வு செய்த முன்னோடிகள் ஆவர். அவர்களைப் போன்றோர்களுக்கு அடுத்தபடியாக சுமார் நாற்பது வருட இடைவெளிக்கு பிறகு, கார்ல் அவர்களின் ஆய்வு ஒரு வெற்றிடத்தை நிரப்புவதாக உள்ளது.
செம்பருத்தி.காம் ஏற்று நடத்தும் இந்த நூல் வெளியீடு 16.2.2015-இல் மாலை மணி 7.30க்கு கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில் நடைபெறும். நிகழ்வு ஆங்கிலம் – தமிழ் என இரு மொழிகளிலும் நடைபெறும்.
நூலின் மேலோட்ட கண்ணோட்டம் என்னை கவர்ந்துவிட்டது.பனியின் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதது எனது துர்பாக்கியம்.ஏற்பாட்டு குழுவிற்கும் படைப்பாளருக்கும் எமது பாராட்டுகள்.
நாங்கள் வாழ்ந்த டுப்லின் தோட்டம் இப்போது இல்லை. நாங்கள் அனாதை போல் , நாடோடிகள் போல் , நடை பிணமாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை யில் எதுவும் மிச்சம் இல்லை.காலன் எமது தந்தையை, அண்ணாவையும் எடுத்தான் . இந்த நாட்டை விட்டு போக முடியவில்லை. எனது விதி.
அது நீலகண்ட “ஐயர்” என்பதால் நாம் வழக்கம் போல அந்த ஆய்வை உதாசீனப்படுத்தினோம். இப்போது முனைவர் கார்ல் வெள்ளைக்காரர் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறோம். தமிழன் சொல்லுவதை தமிழன் கேட்பதில்லை என்பதற்கு இந்த ஓர் உதாரணம் போதும். யார் நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை! ஆனாலும் இந்தத் தமிழினம் வருங்காலத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்!
நூலை தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்.
மலேசியாவில் தமிழன் எழுத்தாளனே இல்லையா?
கடந்த கால இந்தியர்களின் ஒப்பாரிகளை காலா காலமாக சொல்லி, எழுதி, பேசி மாநாடுகள் நடத்தி தமிழர்களை பரிதாப தோரணையில் வைத்து ஏமற்றும் புத்தாக்கம் நம்மை எங்கு கொண்டுபோக உள்ளது.
இந்த வெளியிடும் ஒரு வேள்விதான்?
பெயரை மறக்க …ஜானகி ராமன் இந்தியன் புத்ககம், கலைமுரசு இந்தியன் புத்தகம், இன்னும் பல இந்தியன் புத்தகங்கள் முழுக்க முழுக்க மலேசியத் தமிழகளின் ஒப்பாரிகள். தமிழரல்லாத எவரும் உழைத்தானா ? உதிரம் சிந்தினானா ? சயாம் ரயில் பாதையில் செத்தானா ? ஜப்பான் காலத்தில் கத்தியில் குத்து பட்டானா?
இப்போதும் மூன்று லச்சம் தெலுங்கர்கள் , 50 ஆயிரம் மலையாளிகள் இருக்க தமிழர்கள் 40 லட்சம் இருந்தும் இந்தியன் பெயரில் தமிழர்கள் அடகுத்தனம் எழுத்தாளர்கள் கொட்டத்தில் தமிழர்களை காணோம்.?
சமீபத்தில் பூஜாங் பள்ளத்தாக்கு ஆவன படத்தை பார்த்தேன் 8 டாம் நூற்றாண்டை தொட்டது மதமே இலாதான் மலாயா பூர்வீகள் கூட்டம் இந்துக்களாக வாழ்ந்த வலராறு பின்பு புத்த ,இஸ்லாத்து மதங்கள் பெண்களை கருவியாக்கி குடிபுகுந்த விதிகளை கண்டோம்.
மலேசியாவில் யார் தமிழன் என்று எழுத ஒருத்தரும் முன் வருவதில்லை ? இதுவரை இந்தியனை எழுதியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் கலப்பில் கலந்த நாத்திக இடையர்கள் ! இந்தியனாக , திராவிடனாக , இதரவனாக தமிழில் புகுந்து ஆங்கில மேன்மையில் வரலாறுகள் திருப்பி துப்ப வாங்கி படிப்பவன் தமிழன்?
இதிலும் இந்தியன் என்ற மறைவில் தமிழன் கதைகள்தான் அநாதை பாத்திரங்களாக புத்ககம் முழுதும் படம் ஒட்டப்படும். மலேசியாவிலும் சரி தமிழகம் இலங்கையிலும் சரி இயக்கங்கள் பலவற்றால் தமிழ் சமூக இயக்கம் பல வந்தும் தன்னை தமிழனாக் அடையாளபடுத்த தயங்குறான்? தன் எழுத்து விற்க வேண்டும் என்ற ஆதங்கம் மிஞ்சி நிற்க எழுதி ஒரு இனத்தை அழிக்கிற உண்மை பலகாலம் வெடிய வெடிய வேடிக்கை காட்டுகிறது.
பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடையார் செயல் (குறள்) என்பதெலாம் வணிக இலக்கியத்தோடு நின்று விடுகிறது.
தமிழன் இலக்கியம் தமிழ் இனத்தை இன்னும் காக்க வில்லை!
அவ்வனம் அரிவாள் /அறிவால் இன்னும் தமிழன் எழதிய எழுத்துக்கள் தமிழனிடம் சேர வில்லை. ஆனால் இந்தியன் பதிவில்
தமிழன் அவமானம், ஏழ்மை, வறுமை, ஆனாதைத்தனம் ,அசம்பாவிதங்கள் இந்த சிற்றறிவு சிக்கலில் சிறுமையாகிறது.
இதை படித்தா தேசிய தோட்ட தொழிலாள சங்க அதிகாரியும் இதர மதிய அரசும் திருந்த போவுது…பூஜாங் பள்ளத்தாக்கே இன்னும் இழு பரியில்தாம்…. படித்து இன்னும் நம்மை அடிமையாக்கி கொள்ளாமல்
இருந்தால் சரி.
இந்த இந்தியன் “அனாதைகளின் சோக சங்கதியை துக்கத்தை” படித்து கண் கசக்க வேண்டாம். தமிழன் எழுவான்.
பெரும்பாலான நம் இந்தியர்கள் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்தார்கள் .நாட்டின் வளம் பெருக கடுமையாக உழைத்தார்கள் ஆனால் நிலம் சொத்து வாங்க இயலவில்லை .பலர் இன்னும் சொந்த வீடு இல்லாமல் அவதிபடுகிறார்கள் . இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்பதை நாடு மறந்தது ………
மலேசிய இந்தியர்கள் என்று சொல்லாதேங்கப்பா !! ஆம் ,இந்தியன் வர்கத்தில் ,தெலுங்கரும் ,மலையாளியும் ,தமிழர்களும் இன்னும் பலர் உள்ளனர் ,இதில் உண்மையான துயரார்ந்த அனாதைகள் மலேசிய தமிழர்கள் தான் ,மற்றவர்கள் சிறப்பாகத்தான் வாழ்கிறார்கள்
மலேசியா தமிழர்களின் நிலை குறித்து பல முறை தெரிவிக்கப்படுள்ளது. அனால் இதுநாள் வரைக்கும் எந்த தீர்வும் இல்லை. தமிழர்களால் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனில் , எந்நாளும் இதே நிலய்தான்.
மோகன் அவர்களே அருமையாக சொன்னீர்கள் ,மைக்க அவர்கிட்டே கொடுங்க.
மோகன் மற்றும் போன்றங்கண் அவர்களுக்கு . நீங்கள் கூறிய உண்மைகளை ஏற்றுக்கொண்டாலும் .இன்று மலேசியா தமிழர்களின் நிலை பின்தள்ள பட்ட காரணம் ஒன்றுதான் , தமிழன் தமிழனாக வாழவில்லை அவ்வளவுதான் . இங்கே ஒவ்வொரு தமிழனும் ,கௌண்டனாக,தேவராக, செட்டியாராக ,முதலியாராக ,நாடாராக ,வன்னியனாக, பறையனாக ,சக்கிளியனாக,பல்லனாக வாழ்வதால் தமிழனின் முன்னேற்றத்திற்கு தடை. மலேசியாவில் மட்டும் 30 மேல் சாதி இயக்கங்கள் பதிவு செய்ய பட்டுள்ளன .
எங்கே எவருமே கருத்துரைக்கவில்லை? ஒருவேளை நான் கூறியது சரியோ???
புண்ரங்கன் அவர்களே நீங்களுமா?
தமிழர்கள் முன்னேறவில்லை என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். சரி! 30க்கு மேற்பட்ட சாதி இயக்கங்கள் இருப்பதாக வள்ளியூர் முருகன் சொல்லுகிறார். அல்லது 30 மேல் சாதி இயக்கங்கள் இருப்பதாக சொல்ல வருகிறாரா என்றும் தெரியவில்லை! எப்படி இருந்தாலும் சரி. தமிழர்கள் முன்னேறவில்லை என்றால் தங்களது சாதி சங்கங்களை வைத்தாவது அவர்கள் முன்னேறட்டுமே! அதுவும் நல்லது தானே! இன்று நாமக்கல் சங்கத்தினர் கல்வியுலும் பொருளாதாரத்திலும் வலுவாக இருக்கின்றனர். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பொருளாதாரத்தை எப்போதுமே அவர்கள் கையில் வைத்திருக்கின்றனர். முதலியார்கள் எல்லாக் காலத்திலுமே கல்வியில் முன்னணியில் இருக்கின்றனர். இந்தச் சங்கங்களின் மூலம் நல்லது தானே நடக்கின்றன. அப்படியாவது தமிழர்கள் முன்னேறட்டுமே! எவ்வளவு நாளைக்குத்தான் பஞ்சப்பாட்டுப் பாடப்போகிறோம்!
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர் , எங்கு எப்படி நூலை பெற முடியும் ?
சாதியத்தை போற்றுவது எதனால்?. தான் உயர்ந்தோன் என்றும் பிறர் தாழ்குலத்தோர் என்று பாகுபடுத்ததானே?. அதனால் தமிழர் உயர்வாரா?. ஒற்றுமையுடன் வாழ்வாரா?.
“சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.”
என்று பாரதி சொன்னது செவிட்டுத் தமிழருக்கா இல்லை அனைவரிடமும் அன்பு கொண்டு தாழ்ச்சி, உயர்ச்சி இல்லாமல் கூடி வாழ வேண்டும் என்று நினைக்கும் தமிழருக்கா?. சொல்லுங்கள்.
கூட்டுறவு வாணிபம் என்பது தமிழருக்கு பொருளாதார மேன்மையைத் தரும் என்றால் அக்கூட்டுறவுக்குப் பெயர் வைக்க தமிழனிடம் பொருள் பஞ்சமா அல்லது தமிழ் வார்த்தைப் பஞ்சமா?. சாதியத்தின் பெயரால் தான் தமிழர் தனித்தனி சிறிய குழுக்களாக முன்னேற முடியுமா?. ஏன் நாமக்கல் கவுண்டரும், நாட்டுக் கோட்டை செட்டியாரும், பறையன் எனும் தமிழனுடன் சேர்ந்து வாணிபம் செய்தால் தமிழர் பொருளாதாரத்தில் மேம்பட மாட்டாரா?. அவ்வாறு செய்யாமால் தன் சாதியே பொருளாதாரத்தில் மேம்பட்டு, வளர்ந்து பிற சாதியினரை தனது அடிமைகளாக வைத்திருக்க வேண்டுவோர் சுயநலக் கிருமிகளா அல்ல தமிழர் அனைவரும் ஒருமித்து வளர வேண்டும் என்று நினைக்கும் பொதுநலவாதியா?. தமிழர் ஒற்றுமையை உண்மையாக வேண்டுவோர் சாதிய சாயத்தை தமிழர் முகத்தில் வீசாமல் இருங்கள். தமிழர் ஒற்றுமை, ஒற்றுமை என்று வெளியே கூப்பாடு போட்டுக் கொண்டு கதவு மறைவில் சாதிகள் வேண்டுமடி பாப்பா என்று சொல்லாதீர். அவ்வாறு சொல்வீரானால் பாரதி சொன்ன “உயர்ந்தமதி” இல்லாத படித்த முட்டாள்களுக்கு ஒப்பாவீர்.
நண்பரே! ஒருவர் முன்னேற்றத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை. நாட்டில் எல்லா வசதிகளும் உண்டு. செய்ய வேண்டியதெல்லாம் அவரவர் சொந்த முயற்சியில் தான். யாரும் யாருக்கும் தடையாக இல்லை. ஒரு மனிதனைப் பார்த்து இவன் இந்த சாதிக்காரன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நாமே போய் வலுக்கட்டாயமாக சொன்னால் தான் உண்டு. இப்போதெல்லாம் படிக்கும் போதே காதல் பண்ணி பிறகு திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். யார் எந்த சாதியைப் பார்த்தார். தமிழ் நாட்டு சூழலுக்கும் மலேசிய சூழலுக்கும் வித்தியாசம் உண்டு. நாம் தமிழ் நாட்டையே அளவுகோலாக வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். மலேசிய சூழல் அப்படியல்ல!
மலேசிய சூழல் அப்படி இருக்க வேண்டாம் என்பதுதான் எல்லோருடைய அவாவும். ஆனால் இங்கே உள்ளவர் என்ன செய்துக் கொண்டிருக்கினர்?. சாதி சங்கங்கள் வைத்துக் கொண்டும், திருமணப் பத்திரிகைகளில் மராவாமல் தனது சாதிய புகலாரத்தைப் போட்டுக் கொண்டும் இருப்பது மலேசிய தமிழர்களே. அப்படி போட்டுக்கொள்வதின் நோக்கமென்ன?. அவர்கள்தான் அறிவிலிகள் என்றால் கற்றறிந்த நாமும் அப்படியே இருக்க வேண்டுமா?. நாமல்லவா அவர்களுக்கு நல் வழியைக் காட்ட வேண்டும். அதை விடுத்து சாதி சங்கங்கள் இருந்தால் நன்மை என்பது போல எழுதினால் நாமும் அவர்களைப் போல ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபிப்பதற்கா?.
தாழ்ந்தவர் என்போரை எங்கே வைத்துள்ளீர்?. நடுவீட்டிலா? அஞ்சடியிலா?. ம.இ.க. – வில் அன்று ஒதுக்கி வைத்த தலைவரில் இருந்து இன்று உள்ள தலைவர்கள் வரை யாருக்கும் அவர்களை அரவணைக்க என்னமில்லையே!. இன்றும் ஒதுக்கி தே.மு. -யில் சேர விடமாட்டோம் என்றும் எங்கள் பங்கில் உனக்குப் பங்கில்லை என்றுதானே பேசிக் கொண்டிருக்கின்றனர். வாருங்கள் நாமும் தமிழர் நீங்களும் தமிழர் எல்லோரும் ஒன்றிணைவோம் என்று யாராவது வாய் திறந்தார்களா?. எங்கள் பங்கில் உங்களுக்கும் கொடுத்து பங்கிட்டு சாப்பிடிவோம் என்று யாராவது வாய் மலர்ந்தார்களா. நீ நின்ற இடத்திலேயே நில்லு. அந்த அஞ்சடியே உனக்கு. எனக்கோ பஞ்சனை மெத்தை என்பதுதானே ம.இ.க. – வில் இன்றும் தாரக மந்திரமாக உள்ளது!. இவர்களை எதிர்பார்க்காமல் எப்படியோ தனது சுயகாலில் நின்று அவர்களில் மேலே வந்தவர்கள் சிலரே. இப்படி 30 ஆண்டுகளாக ஓரங்கட்டப் பட்ட மக்கள்தான் இன்னும் வாழ்வாதாரத்திற்கு அரிசிக்கும், பருப்புக்கும் ஓடோடி வரிசை பிடித்து நிற்கின்றனர். இதுதான் அவர்களின் இன்றைய வாழ்க்கை. இன்பம் பொங்கும் மலேசியாவில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் தமிழர் நிலை இதுதான். துன்பம் பொங்குவது அவர்கள் வீட்டில். புரிந்துக் கொண்டு இப்பச் சொல்லுங்கள் மலேசியாவில் தமிழர்களிடையே சாதியம் ஒழிந்து விட்டதா? அல்லது ஒளி விட்டு எரிகின்றதா?.
தேனி, இந்த ஜாதிப் பிரச்சனையில் உங்களுக்கு இருக்கும் தெளிவு எனக்கில்லை. அரிசிக்கும் பருப்புக்கும் வரிசைப் பிடிப்போர் தாழ்த்தப்பட்டோர் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லா இனத்தவர்களிலும் குடிகாரக் கூட்டம் என்று ஒன்று உள்ளது. அது வெள்ளைக்காரனாக இருந்தாலும் கருப்பனாக இருந்தாலும் அவன் கையேந்தி பிச்சை எடுக்கத்தான் வேண்டும். அது தான் நம்மிடையேயும் நடந்து கொண்டிருக்கிறது. குடிகாரனுக்கு உயர்வு தாழ்வு என்று ஒன்றும் இல்லை. எது எப்படி இருந்தாலும் உங்கள் உரிமையில் நான் தலையிட விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு தமிழனின் முன்னேற்றமே என்னுடைய குறிக்கோள். அது நோக்கியே என்னுடைய வருங்காலம் அமையும். வாழ்த்துகள்!
தேனீ அவர்களே தேனீ யைப்போல் சரியாக கொட்டிநீர் நன்று , ஐயா ஆபிரகாம் அவர்களே .என்னுடைய கருத்து எந்த சாதியினராக இருக்கட்டும் அது முக்கியம் அல்ல . நம் நாட்டில் மலேசிய தமிழர்களின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்றுதான் கூறுகிறேன் . எனது மூத்த குடும்ப உறுப்பினர்களிடம் பல தகவல்கள் நான் பெற்ற அனுபவம் உண்டு .பிரிட்டிஷ் ஆட்சியில் மலேசியா வில் உள்ள பல ரப்பர் தோட்டங்களிலும் தமிழர்களை சாதி வாரியாக லய வீடுகளில் குடியேற்றப்பட்டுள்ளனர் .இதை யாராலும் மறுக்க முடியுமா? அதேபோல் இன்று சாதி சங்கங்கள் சமூக இயக்கங்களை போல் பதிவுசெய்து தமிழர்களை முட்டாள் ஆக்கும் வித்தைகளை அறிவீரா ஆபிரஹாம் அவர்களே? ஒருவேளை உங்களுக்கு தெரிந்தாலும் அதை பற்றி உங்கலுக்கு கவலை இல்லை என உங்கள் கருத்தின் வழி தெரிகிறது ,நீங்களும் ஒரு சாதி வெறியர் என்று .தேனீ அவர்கள் கூறியதுபோல் ஏன் மலேசிய தமிழர்கள் எல்லோரும் சாதி வாரியாக இல்லாமல் மலேசிய தமிழர்கள் என ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு நிறைய சாதிக்கலாமே? . அப்படி அன்றே எல்லா தமிழர்களும் ஒன்று பட்டு இருந்திருந்தால் .இப்படி ஒரு வெள்ளைக்காரர் நமக்காக ஒரு ஆய்வு நூலை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது .அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டில் தமிழ் மொழி கல்வி முன்னேற்றம் கண்டு இருந்திருக்கும் .தமிழர்கள் பொருளாதாரத்திலும் முன்னேரி இருப்பார்கள் (சீனர்களை விட ).ஆனால் ஆன்மிகம் பேசும் இந்து சமைய இயக்கங்கள் ,நாத்திகம் பேசும் திராவிட பகுத்தறிவு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் யாரேனும் சாதி இயக்கங்களை பதிவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார்களா? நிச்சயமாக இல்லை .
நம்முடைய முன்னேற்றம் யார் கையிலும் இல்லை. ஆனால் நாம் அதனை எதிர்பார்க்கிறோம். நம்முடைய குறைகளுக்கு யார் யாரையோ குறை சொல்ல விரும்புகிறோம். நமது தடைகளுக்கு அவன் காரணம், இவன் காரணம் என்று காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம். தோட்டப்புறங்களில் மிக அடிமை நிலையில் இருந்தத் தமிழர்கள் பலர் பிற்காலத்தில் பெரிய அளவு முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். யாரும் இவர்களுக்கு ஊட்டிவிடவில்லை. வாழ வேண்டும் என்று நினைத்தவன் வாழ்ந்தான், வளர்ந்தான். நான் குடித்தே சாவேன் என்று நினைத்தவன் அன்றும் அப்படித்தான் இருந்தான். இன்றும் அப்படித்தான் இருக்கிறான். தோட்டப்புறங்களில் இருந்த போது ஜாதியை வைத்து சம்பளம் கொடுக்கப்படவில்லை. இப்போதும் அப்படித்தான். கிடைத்த சம்பளத்தில் மிச்சம் பிடித்து பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுத்தனர். சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர், இப்படித்தான் பிற்காலத்தில் பலர் வெற்றி பெற்றனர். எல்லாமே சொந்த முயற்சிகள் தான். ஜாதியை வைத்து அப்போதும் யாரும் வெற்றிபெறவில்லை. இப்போதும் யாரும் வெற்றி பெற முடியாது. நமது பிற்போக்குத் தனத்துக்கு யார் யாரையோ குறை சொல்லுகிறோம்!
தயவு செய்து இந்த சாதி சண்டைக்கெல்லாம் இந்து மதத்தை இழுக்காதீர்கள் காரணம் சாதியம் ஆரிய வேதத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. அதிலிருந்து விலகி இருப்பது இந்து மதத்தில் இருந்து விலகி விடுவதைப் போன்றதாகும். இராமனாதபுரத்திலே ஒரு கிராமத்தைச் சார்ந்த தாழ்த்தப் பட்ட இந்து தமிழர் என்போர் இரவோடு இரவாக பிப்ரவரி, 1981-ல் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாறினார்களே, அதுபோல் நாம், மலேசிய தமிழர் அனைவரும் தமிழர் சமயமாகிய சைவத்திற்குத் திரும்புங்கள். மலேசிய இந்துக்களுக்கு இருக்கும் ஒரு சங்கமும், ‘இந்து தர்மத்தை’ வாழ வைக்கப் பிறந்த இன்னொரு மன்றமும் ஓரிரவில் காணாமல் பொய்த்து விடும். தமிழர்களுக்கு தமது உண்மைச் சமயம் எது என்ற தெளிவும் வந்து விட்டது. ஒட்டு மொத்தமாக சமயத்தை மாற்ற வேண்டிய நேரமும் வந்து விட்டது.
என்னே அறியாமை. சாதியை வைத்து இன்று ம.இ.க. -வில் ஒட்டு போடு என்று கேட்டு வருகின்ற அத்துணை கழிசடைகளுக்கும் சொல்லுங்கள் உங்கள் நியாயத்தை. அவர்களுக்குத் தெரியும் சாதியத்தால் எப்படி சம்பாரிப்பது என்று. தன் சுய காலில் நிற்க விரும்பும் எத்துனை ஏழைக் குடும்பங்கள் வழி தெரியாமல், உதவி இன்றி தவிக்கின்றன. ‘My skill’ திட்டத்தின் கீழ் அடிமட்ட இந்தியர்களைக் கண்டு வந்து அவர்கள் பட்டினியாலும் படிப்பறிவில்லாததாலும் படும் வேதனையைச் சொல்லும் நண்பர்களின் கதையைக் கேட்டால் துக்கம் தொண்டையை அடைக்கின்றது. இன்றோ இந்நாட்டு இந்தியர்களுக்கு நாங்கள்தான் தலைமை பொறுப்பு என்று சொல்லும் சோனகிரி கட்சி தொண்டர்கள் அவர்களை நாடிப் போய் உதவுவதில்லை. எப்படி அவர்களால் சுயமாக எழுந்து நின்று முன்னேற முடியும்?. இந்த அரசியல் கபோதிகளை விட ‘My Skill Foundation’ இந்தியர்களுக்கு செய்யும் காரியம் அளப்பரியது. இது சாதி சங்கங்கள் செய்யும் சுயநலத் தொண்டை விட மிகப் பெரியது. தூக்கி எறியுங்கள் சாதி சங்கங்களை. அதை போற்றுவோரையும் மக்கள் மத்தியில் இருந்து ஒதுக்கி வையுங்கள். அப்புறம் ஏன் சாதியம் ஒழியாது என்று பார்ப்போம்.
இந்த குறிப்புக்கும் புத்தக விழாவுக்கும் சம்பந்தம் இல்லை ,,,
ஆனால் ; எல்லைததாண்டி ஆர்பரிப்பு எழுதிவர்கள் எய்திய குறியில்லாககாகித அம்புகளில் சாதியமமும், மதமும், மொழியும், இனமும் மொக்கையா அடி படுவதை பார்க்கிறேன். வெதும்புகிறேன்…
புத்தக தலைப்பை போல அனாதைகள் அடித்துக்கொள்ளும் அறிவிலிகள் தமிழன் கூட்டத்துக்கு இன்னும் ஆயிரமாயிரம் இந்தியன் புட்டி பால் கொடுத்து புத்தி சொன்னாலும் விளங்காது.
“உலகத் தமிழனுக்கு” (சிலரைததவிர) பலருக்கு ,இந்தியன் யார் ? திராவிடன் யார் ? ஆதித்தமிழன் , பண்டைத தமிழன் , தமிழன் யார் ,தமிழுக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ?, ஆரிய ஐயர்கள், வடுகர்கள் ,பிராமணர்கள் ,இந்துக்கள் ,சைவ சித்தாந்தம் , தமிழர் சமயம் , சித்தர்கள் , சோதிடம் ,என் கணிதம் , கிரக ஜோதிடம் , தமிழர் திருநாள் , பொங்கல் , சித்திரை நாள் , தமிழர் சமய திருவிழாக்கள், தமிழர் பண்பாட்டு விழாக்கள் என்று குழம்பி போய் உள்ளனர். இதில் இன்னும் சாதி , மொழி வழி இனம் ,சமயம் என்று ஒன்றோடு ஒன்றை குழப்பி தமிழனுக்குள் பல குழப்பங்களை தந்த திராவிட கூட்டமும் ஆரிய கூட்டமும் 12 கோடி தமிழனை வெறும் முகர்வோர் அல்லது தங்கள் அரசியல் சமய வணிகத்துக்கு பயநீட்டாளர்களாக மட்டும் காசு மேல காசு பண்ண மாட்டும் யோசிக்கிறான்.
நாடு முழுக்க தைப்பூசத்தில் கூடிய சுமார் 30 லட்சம் தமிழர் கூட்டம் கூட்டம் தன் சமையத்தை முழுசா தெரியாத கூட்டம் . ஐயா அறு நாகப்பனும் ,தர்மலிங்கமும் ஆதி முதல் அங்கம் அங்கமா சொல்லியும் அடிப்படை இல்லாத இந்த தமிழன் இனம் இன்றும் இஞ்சி தின்ன ……அஞ்சிநேயர் என்றால் பிரமச்சாரி என்று மட்டும் பேசுது?
லச்சம் கணக்கில் பத்து மலை தைப்பூசத்தில் கூட்டம் ! 160 அடி சிலைக்கு ஒரு மாலை போட்டு தைப்பூசம் கொண்டாட தெரியாத இந்துக்கள் கூட்டத்தில் ஒரு சைவ சித்தாந்த சிந்தனை வாதியும் இலாத வதிகள் கூட்டமாய் திரிகிறோம்.
இந்த புத்தக விழாவிற்கு வரும் “தமிழன் மட்டும்” அதற்கு முன் 15/2/2015 இதே இடத்தில நடக்கும் தமிழர் திரு நாள் விழாவில்
தமிழன் என்றால் யார் அவன் சமயம் எது என்று பார்த்து விட்டு வாருங்கள். இந்தியன் எப்படி ஏய்க்கிறான் என்று உணருங்கள். நம்மில் 10 பேராவது திருந்துவோம்.? நன்றி.
பிரிட்டிஷ் ஆட்சியில் மலேசியாவில் உள்ள பல ரப்பர் தோட்டங்களிலும் தமிழர்களை சாதி வாரியாக லய வீடுகளில் குடியேற்றப்பட்டுள்ளனர் .இதை யாராலும் மறுக்க முடியுமா? :velliyoor முருகன்.
பிரிட்டிஷாரிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை விதைத்தவன் யார்?நம் ஜாதி சமூகத்தினர் தானே.பாகிஸ்த்தானிலும் நம் சமுக பிரிவை பார்த்தான்,பிரித்தான்,இந்தியாவில் வேறு எங்காயினும் அவனால் நிலத்தை பிரிக்க முடிந்ததா?மனு சாஸ்திரத்தின் மூலம் ஜாதியை அங்கிகரித்தான்.சமுகத்தை பிரித்தான்.அவனிடம் மனு சாஸ்திரத்தை கொடுத்தவன் யார்? மலேசிய தமிழனும் இந்திய வம்சாவளி தானே,பெரு நிலத்தில் என்ன செய்தானோ அதையே இங்கேயும் செய்தான். கோளறு எங்கே உள்ளது?பிரிவினையால் ஒரு பாதிப்பு ஏற்படவே குரல் கொடுக்க தொடங்கினான்.பின் என்ன?தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்.ஒரு நாய் ஊளையிட ஊர் நாயெல்லாம் ஊளையிட ஒரு முற்றும் இல்லை.
இந்நிலையில் பாரதியாரை பற்றி எனக்கோர் நினைவு,இறக்கும் தருவாயில் சொன்னதாக ஒரு கவிதை,..காலா வாடா என் முன்னே ,உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்.
ஜாதி என்னும் காலனை எட்டி உதைக்க துணிச்சல் இருந்தால் நமக்கு யாரும் வேண்டாம்.மனம் இருந்ததால் மார்க்கம் உண்டு.ஜாதியை முடிக்க முழக்கம் வேண்டாம்.போராட்டம் வேண்டாம்.யார் தலைமையும் வேண்டாம்.வானத்தை நோக்கி உமிழாதே.
வெறுமெனே ஜாதி சொல்லி வருபவன் முகத்தில் காரி உமிழ்ந்துவிடு.காலத்தின் கட்டாயத்தால் ஜாதி சங்கங்கள் மூடப்படும்.
தேனி ஐயா! நீங்கள் சொல்லுவதைத்தான் நானும் சொல்லுகிறேன். பட்டினியாலும். படிப்பறிவு இல்லாமலும் வேதனப்படுபவர்களை – அவர்கள் தமிழர்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் யோசியுங்கள் என்று நான் சொல்லுகிறேன். நீங்கள் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் தான் என்கிறீர்கள். ஜாதியை வைத்துத்தான் அரசியல்வாதி பிழைப்பு நடத்துகிறான். வாழ்க்கையை அனுபவிக்கிறான். அரசனைப் போல வாழும் அவன் ஜாதியை விட்டுக் கொடுக்கமாட்டான்! ஜாதி சங்கங்களை மக்கள் மத்தியிலிருந்து ஒதுக்கி வையுங்கள் என்று இப்படி இரண்டு வரியில் சொல்லுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஒவ்வொருவனும் தலைவன் ஆக வேண்டும் என்று நினைக்கிறான்! அதற்குப் பதிலாக எந்தவித ஆரவாரமின்றி செயல்படும் “மை ஸ்கில்” லுக்கு எப்படி உதவலாம் என்று நாம் அனைவரும் யோசிப்போம். இந்தத் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்!
தேனீ அவர்களே ,சாதி சங்கங்களையும் அவர்களை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளையும் ஆபிரகாம் விட்டு கொடுக்க மாட்டார் ,காரணம் அவருடைய கருத்துகளில் இருந்து தெரியவில்லையா ? அவர் ஒரு சாதி வெறியர் என்று . ஐயா தேனீ அவர்களே . பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றும் ,நெஞ்சுப் பகுதியில் பிறந்தவன் சத்ரியன் என்றும் ,வயிற்ருப் பகுதியில் பிறந்தவன் வைசியன் என்றும் அதற்கும் கீழே பிறந்தவன் சூத்திரன் என்றும் (ஈன சாதியை சேர்ந்தவர்கள் ). எந்த சமைய வேதம் கூறியது? பௌத்த மதமா ? கிருஸ்துவ மதமா? அல்லது இஸ்லாமிய மதமா ? .தேனீ அவர்களே நீங்களும் அறியாமையில் உலருகிரீர்கலா ? நீங்கள் கூறிய ஆரிய வேதத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் என்ன வேறுபாடு என்று கூற முடியுமா ?
வெள்ளியூர், நான் தமிழனின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறேன். தமிழன் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. அப்படி அவர்கள் தலை நிமிர்ந்து வாழ நம்மால் என்ன செய்ய முடியும் என்று தான் நான் யோசிக்கிறேன். தமிழன் கூனிக்குறுகி வாழ்வதை நான் விரும்பவில்லை. தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லுவது சாதி வெறியா? பரவாயில்லை! இந்தத் தமிழினம் எனது இனம், எனது இரத்தம். அவர்களது முன்னேற்றம் எனது குறிக்கோள். அதைத்தான் நாம் சொல்லுகிறேன்! நானே பெரியாரை ஆதரிப்பவன். என்னைப் போயா!
நான் சொல்ல வந்ததைப் புரிந்துக் கொள்ளவில்லை. இந்து மதம் என்றாலே அது வைதீகப் பண்பாட்டைக் கொண்டதுதான் என்று பறைசாற்றியவர் மத்தியில் சாதியத்தை ஒழியுங்கள் என்றால் கேட்பார்களா?. அவர்களிடம் சொல்வதை விட்டு விட்டு அவர்களை விட்டு நீங்குங்கள் என்று சொன்னேன். வருணாசிரமத்தை சரியென்று வாதிடும் இந்து மதம் தங்களுக்குத் தேவையா என்றுதான் சொல்ல வந்தேன்.
ஆபிரகாம் நீங்கள் பெரியார் ஆதரவாளரா ? அப்போ சரி , உருப்பட்டது ஊடாந்தான் .
ஹமிட் , பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளில் எனக்கும் ஈடுபாடு உண்டு ,அதே வேளையில் பெரியார் தமிழ் இனத்திற்கு செய்த மாபெரும் துரோகங்களும் உண்டு .யாழ்ப்பான கதிர்வேலன் அவர்களை அவமதித்த வரலாறும் உண்டு .தமிழ் மொழியை காட்டு மிராண்டி என்று அவமதித்த சம்பவங்களும் உண்டு .வேண்டுமென்றால் பெரியார் கதிர்வேளர் என யு டியுப் வழி காணலாம் .ஆக ஆபிரகாம் போன்ற பெரியார் பக்தர்களும் அப்படிதான் இருப்பார்கள் .இதில் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை .
பெரியாரின் நேர்மை எனக்குப் பிடிக்கும். பொதுத்தொண்டில் இப்போது ஈடுபட்டிருப்பவர்களில் யாரையாவது “கறை படியாதவர்” என்று சொல்ல முடியுமா. தமிழனின் முன்னேற்றத்திற்காக சப்பாத்தடி, செருப்படி அவர் பட்டது போல் இதற்கு முன்னரும் யாரும் இல்லை இனிமேலும் யாரும் வரப்போவதில்லை. அவரது நேர்மைக்கும், உண்மைக்கும் தலை வணங்குகிறேன்!
பெரியார் நேர்மையானவர்தான் அது எங்களுக்கும் தெரியும் .ஆனால் தமிழனையும் தமிழ் மொழியையும் தரக் குறைவாக விமர்சிப்பதில் பெரியாரை மிஞ்சியவர் எவரும் இல்லை . நேர்மைக்கு எடுத்துக்காட்டு பல பச்சை தமிழர்களும் பெரியார் காலத்தில் வாழ்ந்தவர் உண்டு எ.கா : பெருந்தலைவர் காமராஜர் , அமைச்சர் கக்கன் .பரமேஸ்வரன் போன்றோர் .நம் நாட்டிலும் வாழ்ந்தவர் உண்டு எகா : ஜோன் எ திவி (முதல் மஇகா தலைவர்), போராட்டவாதி எஸ் எ கணபதி , தோழர் வீர சேனன் தொழிற் சங்க போராட்டவாதி ,துன் வீதி சம்பந்தன் , டாக்டர் வி டேவிட் .போன்றோர் .என்னமோ உலகத்தில் பெரியாரை தவிர வேறு யாரும் யோக்கியர்கள் இல்லாததுபோல் பிதற்றுகிறார் ஆபிரகாம் .
நீங்கள் சொன்ன எவரையும் பெரியாரோடு ஒப்பிடமுடியாது. ஒப்பிடவும் கூடாது. அவர் மகா யோக்கியர் என்பதிலே எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். தமிழனைத் தலை நிமிர வைத்ததற்கு அவரே காரணம்!
ஆமாம் மகா யோக்கியர்தான் , பெரியாரின் தந்தை தனது சொத்துக்களை கோவில் மற்றும் அற நிறுவனங்களுக்கு எழுதி வைத்த உயிலை .தனது நெருங்கிய நண்பர் ராஜாஜி ஐயங்கார் (வழகறிஞர் ) மூலமாய் தனது பெயருக்கு மாற்றிய பெரியார் மகா யோக்கியர்தான் .(பகுத்தறிவு கொள்கை பரப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பில் மட்டும்தான் பெரியாருக்கு ராஜாஜி எதிரி , மற்ற காரியத்தில் ராஜாஜி பெரியாருக்கு நெருங்கிய நண்பர் ஹிஹிஹிஹி )
ஆபிரகாம் நீங்கள் திராவிட கழக உறுப்பினரோ? .நீங்கள் பெரியாரின் மறு பக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது?
ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு இப்ப மனுசனையே கடிச்ச கதையாகிப் போயிடுச்சு. தன்னை தற்காத்துக் கொள்ள உயிருடன் இல்லாத மனிதரின் மீது குறை சொல்வது கீழ்காணும் புதுக்கவிதைக்கு ஒப்பாகும்:
“இருப்பதை இழந்து
அடிப்பவன் புகழ் பாடி
அடிமையாய் வாழ்பவனுக்கு,
ஆள்பவனின் பரிசு
அடியும் உதையும் மட்டுமே”.
(எழுத்து.கோம் என்ற வலைப்பூங்காவில் இருந்து சுட்டது)
தமிழனின் எதிரி தமிழனைக் கொண்டே தாக்குவதில் பலே கில்லாடிகள் என்று ஏனோ பல தமிழர்கள் இன்றும் புரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இதனாலேதான் என்னவோ இந்தத் தமிழருக்கு இ. வா. என்று நெற்றியில் எழுதி வச்சானோ அந்த ஆண்டவன்!. வாழ்க அந்த ஆண்டவன்.
வள்ளியூர், நான் தலைவர்களின் மறுபக்கத்தைப் பார்ப்பதில்லை. அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுவேன்.தலைவர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொண்டு நான் என்ன பி.எச்.டி. யா எடுக்கப் போகிறேன்! கொஞ்சம் வேலை வெட்டிகள் இருப்பதால் இது போன்ற ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை. எனினும் நானே நினைத்தாலும் எனது கருத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. சொன்னது சொன்னது தான்.ஆனாலும் ஒன்று: நீங்கள் என்னை ஜெயித்துவிட்டீர்கள்! வெற்றி பெற்று விட்டீர்கள்! அப்படி, இப்படி, ஆகா! ஓகோ! வாழ்த்துகள்!
தோழர் ஆபிரகாம் அவர்களே ,எனது கருத்துக்களால் உங்களை வெல்வது எனது நோக்கம்மல்ல .எனக்கும் வேலை வெட்டி உள்ளது .அதனால்தான் நேரம் கடந்து உங்களுக்கு பதில் கருத்து எழுதுகிறேன் .நல்லதை ஒரு நல்லவர் மூலமாய் வந்தால்தான் அந்த நல்ல கருத்துக்களுக்கு மரியாதை உண்டு என நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன் .தமிழனையும் ,தமிழ் மொழியையும் கேவல படுத்தினால் அவர் யாராக இருந்தாலும் (பெரியார் உட்பட ) ,அவரை ஆதரித்து புகழ் பாடுவது மானமுள்ள தமிழன் பொறுத்துக் கொள்ளமாட்டான் என உணர்த்துவதே எனது நோக்கம் இதை பி எச்டி அளவிற்கு ஆராய்ச்சி செய்ய தேவை இல்லை அடிப்படை அறிவு (கொமெண்ட் சென்ஸ் ) இருந்தாலே போதும் .நீங்கள் கூறியபடி யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம் .இங்கே போராட்ட வாதி சே குவேரா வின் வார்த்தை ஒன்று நினைவில் வருகிறது “மாற்றத்தை விரும்பாதவன் அடிமை மட்டுமே ” . நன்றி
.ஒரு முக்கிய குறிப்பு எனது புனைப் பெயர் வெள்ளியூர் (பெராக் மாநிலம் ) முருகன் . வள்ளியூர் முருகன் அல்ல .
எனது கருத்துக்கள் நல்லவர் மூலமாக வரவில்லை என்பதற்காக நன்றி! நான் மானமுள்ள தமிழன் அல்ல என்பதற்காக நன்றி! எனக்குக் காமன் சென்ஸ் இல்லை என்பதற்காக நன்றி! நான் மாற்றத்தை விரும்பாதவன் என்பதற்கு நன்றி! நீங்கள் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிய நன்றி! இது இப்படித்தான் என்று சொல்லிக்கொடுத்த பெரியாருக்கு நன்றி!