சிறிசேனாவின் இந்திய வருகை : தமிழக மீனவர்களுக்கு இனிப்பான செய்தியாகுமா?

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் மைத்ரிபால சிறிசேனா மார்ச் 15ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருவதற்கு முன்பு இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மீனவர்களும், அவர்களது படகுகளும் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களை மட்டும் விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை விடுவிக்காமல் இருந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் தற்போது தமிழக மீனவர்களின் 87 படகுகள் உள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், இந்தியாவில் உள்ள 18 இலங்கை மீனவர்களின் படகுகளும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

-http://www.dinamani.com

TAGS: