ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் : விசாரணை தீவிரம்

ஸ்விட்சர்லாந்தின் எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பட்டியல் வெளியே கசிந்துள்ளது. இதில் 1,195 பேர் இந்தியர்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் என்று தெரிய வந்துள்ளது.

ஸ்விஸ் லீக்ஸ் என்று கூறப்படும் வங்கிக் ககணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலில் இருக்கும் இந்தியர்களின் பெயர்களையும், அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்ய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பணம் குறித்து விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இன்று அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

-http://www.dinamani.com

TAGS: