மதவெறி அரசியலுக்கு சவுக்கடி

BJP-logo_0தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் “ஆம் ஆத்மி’ வெற்றி பெற்றுள்ளது, மதவெறி அரசியலுக்குக் கிடைத்துள்ள சவுக்கடி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

“தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் “ஆம் ஆத்மி’ பெற்றுள்ள வெற்றியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்தி வரவேற்கிறது.

இது மக்களின் வெற்றி. மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இனி வரும் தேர்தலில் பாஜகவை எப்போதும் வீழ்த்த முடியாது என்ற அதீத நம்பிக்கையில் அக்கட்சி இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் அலை வீசுவதாகக் கருதப்பட்ட மாயை தற்போது கலைந்து போயுள்ளது. மாற்றுக் கட்சிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பதும், மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பதும் இத்தேர்தல் மூலம் தெளிவாகியுள்ளது’ என்றார் ராஜா.

-http://www.dinamani.com

TAGS: