தில்லி முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் துவங்கி தற்போது முதல்வராகியுள்ள கேஜ்ரிவால் இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கலாம்.
ஆனால், அவர்கள் கூறியிருப்பதை முழுமையாக தெரிந்து கொண்டால் உண்மை புரியும்.
அதாவது, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுங்கள். ஆனால், அதற்கு முன்பு லஞ்சம் கொடுப்பதை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் சொல்லிவிடுங்கள். அப்போது தான் அவர்கள் லஞ்சம் வாங்குபவர்களை கைது செய்து 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும்.
லஞ்சம் கொடுப்பதை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு சொல்லாமல் லஞ்சம் கொடுத்தால், லஞ்சம் கொடுப்பவர்களும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
-http://www.dinamani.com