தருமபுரியில் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அங்குள்ள கிராமவாசிகள், தங்கள் கிராமத்தில் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கோரி 5 பேர் கொண்ட குழு மூலம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அவர்கள் இத்பற்றி கூறுகையில், மதுபானம் வாங்குவதற்காக நாங்கள் பொம்மிடி அல்லது கடத்தூருக்கு சுமார் 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
மேலும், இவ்வாறு செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வரும் போது குடிபோதையில் சாலை விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதுபோல ஏராளமானோர் குடிபோதையில் உயிரிழந்திருப்பதால், எங்கள் உயிரைக் காப்பாற்ற எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.newindianews.com
இந்த டாஸ்மார்க் மூலம் தமிழினம் சீரழிவதற்கு மூல காரணம் டாஸ்மாக்கை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தவனே .அவன் தமிழன் அல்ல .
இன்று தமிழ் நாட்டில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டுமென்றால் ஒவ்வொரு பெற்றோர்களும் அவசியம் ‘தண்ணி’ அடிக்க வேண்டும் என்று ஒரு கணக்கெடுப்புக் கூறுகிறது. சாராயத்தின் வருமானத்தை வைத்து அரசாங்கம் நடத்துகிற பெருமை உலகிலேயே தமிழ் நாடு மட்டும் தான் என்பதில் நாம் பெருமைப் படலாம்! மக்களின் முதல்வருக்காக வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்று நீண்ட நாள் பதவியில் இருப்பதற்க்காக நாம் பிரார்த்திப்போம்!
7 கி.மீ தூரம் சென்று குடித்து விட்டு
திரும்பும்போது சாவதைவிட குடிக்கா
மல் சாவதேமேல்.பெற மாத்துங்கடா
அம்மா சாரயக்கடை.