டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில் உக்கிரமான ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆயுதப் போராட்டத்தின் உச்சமாக 1984ஆம் ஆண்டு தனிநாடு கோரும் போராளிகள் தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து வேட்டையாடியது. இதில் தனிநாடு கோரும் இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கவே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையோர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். இருந்தபோதும் பல்வேறு வகைகளில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் நாடு கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 6-ந் தேதியன்று ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது இந்திய அரசுக்கு எதிராகவும் காலிஸ்தான் விடுதலைப் போரை ஒழித்துக் கட்டியதைக் கண்டித்தும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
லண்டனின் ஹைட் பார்க்கில் 3 ஆயிரம் சீக்கியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் இங்கிலாந்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இந்திய தூதரகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் சீக்கியர்களுடன் கரம் கோர்த்தனர்.
இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சீக்கியர்களின் குருத்வாராக்களே நிதி உதவி செய்வதாகவும் இந்தியாவில் சீக்கியர்களின் தீவிரவாதத்தை மீண்டும் துளிர்விட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா’ அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இந்த சீக்கிய தீவிரவாதத்தை தொடக்கத்திலேயே ஒடுக்குவதற்கான வியூகத்தையும் உளவுத்துறை வகுத்துவருகிறது.
சீக்கியர்கள் “இந்தியர்கள்” என்று யாரோ சொன்னாங்களே!. தேவுடா! தேவுடா!.
துர்க்மேனிஸ்தான், உஷ்பெகிஷ்டான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கசகஸ்தான், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான். இப்ப புதுசா ஒரு “காலிஸ்தான்”. இந்த பெயர் ஒற்றுமையில் எல்லா நாடுகளுமே இப்பொழுது தங்களை முஸ்லிம் நாடுகளாக பிரகனப் படுத்திக் கொண்டன அல்லது முஸ்லிம் மக்கள் அதிகமா வாழும் நாடாக உள்ளது. அவ்வாறே நம் வங்காளிமார்கள் போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்களின் குருவாகிய குரு நானக் அரேபியாவில் சில காலம் வாழ்ந்து வந்த பிறகுதான் சீக்கிய மதத்திற்கு கடந்த 300 வருடத்திற்கு முன் வழி பிறந்தது. இதில் “அல்லா” என்பது அவர்களுக்குப் பரீட்சியமானா ஒன்று. அதில் இருந்து வந்ததுதான் இன்று நம்ம பெண்கள் அணிந்துக் கொள்கின்றார்களே ‘punjabi suite’. இது இந்தியாவின் வடக்கே ஒரு காலத்தில் கோலோச்சிய வேற்றொரு மதத்திற்குப் பயந்து சீக்கிய பெண்மணிகள் வலுகட்டாயமாக போட்டுக் கொண்ட முக்காடு. இன்று நம் பெண்கள் இந்த முக்காடில் பகுதியை குறைத்து போட்டுக் கொள்கின்றார்கள். இந்த “தான், தான்” என்ற நாடுகளில் மக்கள் தொடர்ந்து நிம்மதியாக வாழ்ந்தாக சரித்திரம் இல்லை. அப்படிதான் காலிஸ்தான் உருவாகினாலும் இருக்கும். ஐயா வங்காளிமார்களே கொஞ்சம் சீக்கிரமா பார்த்து தனி நாடு வாங்கிடுங்க. அப்பதான் நாங்களும் தனி தமிழ் நாடு பார்க்க முடியும்!
பிரிவினைவாதிகளின் தனி நாடு கோரும் நடவடிக்கைக்கு உச்சக்கட்டமான இந்த பொற்கோயில் ஆயுதப் போராட்டத்தை முடக்க (இந்திய) இராணுவமே நுழைந்து வேட்டையாடியது. கடவுளே!!! கடவுளே!!
மலேசியாவுக்கு என்ன குறைச்சல் , அதுதான் தஞ்சோங் ரம்புத்தான் இருக்கே ! ( ஏதொ ஒரு மலாய் படத்தில் பி. ரம்லி சொல்லியது .)
உண்மைதான். பி. ரம்லி படத்தில் சொன்ன அந்த நகைச்சுவைதான் எம் கருத்துக்கு அடித்தளம். இன்றும் நகைச்சுவை ததும்பிய பி. ரம்லியின் படங்களைப் பார்ப்பதில் ஒரு தனி சுகம். நமக்கு மட்டுமல்ல மலாய்க்காரர்களுக்கும் அப்படிதான்.
1980முன் அவர்கள் தமிழர்களோடு நல்ல நட்ப்போடுதான் இருந்தார்கள் அவர்களும் திருமண வைபவங்களில் சேலை ,பூ ,பொட்டுஎன தமிழர் கலாச்சாரங்களை அனுசரித்தார்கள் 1984 ஆம்ஆண்டுகபபின் அவர்கள் சேலை பொட்டு அணிவதை நிராகரித்தார்கள் அவர்கள் சங்கல்ப்பபடி ஏகமனதான
முடிவுக்கு கட்டுப்பட்டு சிறு பான்மயராக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் .ஆனால் நம் தமிழர்கள்தான் அவர்களுடைய ‘சுடிதாரை விடேன் தொடேன்என்று பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் காலம்மாறும் போது நாமும் மாறித்தான்ஆகவேண்டும் இது காலதின் கட்டாயம் ,
எண்ணும் எண்ணத்திலும், கொள்ளும் கொள்கையிலும் செய்யும் செய்கையிலும் மாற்றத்தைக் கொண்டுவருவோம்!..வாருங்கள்!. ஒற்றுமையும் முன்னேற்றமும் அணியும் ஆடையில் இல்லை!!!! கலாச்சாரமும் பண்பாடும் இனத்தின் சிறிய அடையாளமே!!!! விழி பிதுங்க வைக்கும் ரவுக்கையைவிட சுடிதார் எவ்வளவோ மேல்!!! சிந்திப்போம் செயல்படுவோம்!!