ஓகே கண்மணி படத்திற்குப் பிறகு மணிரத்னம் தன்னுடைய அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய அடுத்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவிருக்கிறாரம். இந்தப் படத்தில் மணிரத்னத்தின் டீம் மீண்டும் இணையவிருக்கிறது.
மணிரத்னம் – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் கார்த்தியும் மணிரத்னமும் சந்தித்துப் படத்தைப் பற்றிப் பேசியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
படத்திற்கான கதையை முடிவு செய்துவிட்டதாகவும் திரைக்கதை எழுதும் வேலைகள் நடப்பதாகவும் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்றும் பேச்சு இருக்கிறது.
கார்த்தி முதலில் உதவி இயக்குநராகவே தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்கினார், மணிரத்னத்தின் உதவி இயக்குநராக கார்த்தி ஆயுதஎழுத்து படத்தில் பணிபுரிந்தார், அப்போதே ஆயுதஎழுத்து படத்தில் சித்தார்த் நடித்த வேடத்தில் கார்த்தியைத்தான் நடிக்கச்சொன்னாராம் மணிரத்னம். அப்போது மறுத்துவிட்டு உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்தி இவ்வளவு ஆண்டுகள் கழித்து தன்னுடைய குருவின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.