சூர்யாவை வைத்து ஹரி இயக்கி வரும் சிங்கம்–3, தனுஷ் நடிக்கும் கொடி படங்களுக்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருந்தனர். மேலும் 3 புதிய தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தம் செய்ய அவருடன் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் ஆபாச பாடல் சர்ச்சையினால் திடீரென்று சிங்கம்–3 படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டனர். மேலும் 2 புதிய படங்களில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
தனுசின் ‘கொடி’ படத்தில் இருந்தும் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபாச பாடல் பிரச்சினை தொடர்பாக அவர் சென்னை திரும்பாமல் தொடர்ந்து கனடாவிலேயே தங்கி இருப்பதால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களுக்கு இசையமைக்க முடியாமல் முடங்கியுள்ளன.
சிம்பு கைவசம் ‘இது நம்ம ஆளு, வேட்டை மன்னன், அச்சம் என்பது மடமையடா’ என்ற 3 படங்கள் உள்ளன. இவற்றில் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வேட்டை மன்னன்’ படம் பாதியில் நிற்கிறது. நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார்.
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கவுதம் மேனன் டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வெற்றி பெற்றதால் இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆபாச பாடல் பிரச்சினையால் படப்பிடிப்புகளிலும் குரல் பதிவு, இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப வேலைகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவர் தரப்பிலும் 6 படங்களின் வேலைகள் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
-http://www.nakkheeran.in
இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க பட வேண்டும், சினிமா துறையில் இருந்து இவர்களை ஓரங்கட்ட பட வேண்டும்.
பொது வாழ்க்கையும் சினிமா வுலகத்தையும் இணைத்து மதிப்பிடுவது தவறு.திட்டம் தீட்டி வாழ்பவர்க்கு அவரின் அறிவே துணை,திட்டம் இல்லாதவனுக்கு ஆண்டவனே துணை,அஜீத் பேசிய வசனம்,
வாழ்க நாராயண நாமம்.
சிம்பு வசை சொல் சேர்த்து பாடிட்டான்..!
எப்படியோ வெளியாகிவிட்டது!
அதுக்காக, இனிமே இப்படி பன்னக்கூடாது சரியா! அப்பிடினு கண்டிக்கிறதோட நிப்பாட்டிகனும்!
கோர்ட், கேஸ், தனிப்படை வச்சி தேடுற அளவுக்கு போனா, சிம்புவுக்கு ஆதரவா நிக்கிறத தவர வேற வழியில்லை!
ஏன்டா எதுக்கு எதுக்கு தனிப்படை வைக்கனும்னு அறிவில்ல!
PENNIS – என்று ஆங்கிலத்தில் வகுப்பாசிரியர் சொல்லுவார், அதையே தமிழில் “சுன்னி” என்றால் அவ்வளவு கொடூரமான வார்த்தையாக கருத படுகிறது.
BREAST – என்று சொன்னால் தப்பில்லை, “முலை” என்றால் மிகப்பெரும் கொடுமையான வார்த்தையாக பார்க்கிறது சமூகம்.
சிறுநீர் கழிக்க போகிறேன், மூத்திரம் இருக்க போகிறேன், ஒன்னுக்கு போறேன் என்றால் கொச்சையாக பார்க்கும் சமூகம் – PISS என்றால் ரசிக்கிறது.
தவறு நமது புரிதலில் தான், கருத்தில் அல்ல. அனைத்து விசயமும் ஓன்று தான். சமூகம் மாற, முதலில் நாம் மாறுவோம்.