எல்லைப் பிரச்னை: அடுத்த வாரம் சீனா செல்கிறார் தோவால்

india_china_map_20121022எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து சீன அரசு அதிகாரிகள், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, வரும் 5ஆம் தேதி அஜித் தோவால் சீனாவுக்கு வருகை தரவுள்ளார். இந்தக் கூட்டத்தில் சீனாவின் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேஸியும் பங்கேற்கிறார். இந்தப் பேச்சுவார்த்தைகளில், இருநாட்டு எல்லைப் பிரச்னையில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் தோவால் பங்கேற்கிறார். சீனப் பிரதமர் லீ கேகியாங்கை 6ஆம் தேதி அவர் சந்தித்துப் பேசுகிறார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

-http://www.dinamani.com

TAGS: