அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்!

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி.

இன்று சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன். அப்போது மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு செய்த ஊழல்களைப் புத்தகமாக காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிடுகிறது என்று கூறினார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஆளுநரிடம் இதுகுறித்து புகார் அளித்து உள்ளதாகத் தெரிவித்த இவிகேஎஸ்., ஆளுநர் இதுக்குறித்து நடவடிக்கை ஒன்றும் எடுக்காததால், இதை மக்களிடம் விநியோகிக்க பிரதிகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று கூறியதோடு, இது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார். தேவைப்பட்டால் நீதி கேட்டு நீதி மன்றத்தையும் அணுகுவோம் என்றும் கூறியுள்ளார் அவர்.

-http://4tamilmedia.com

TAGS: