மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்ட சீமான், மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா?
இலவசங்கள் வழங்கியதை சாதனை என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்..இது சாதனையா வேதனையா? என கேள்வி எழுப்பினார்.
நாட்டில், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் என்று அனைத்தும் தனியார் மயம். அப்படி என்றால் எதுக்குத்தான் அரசு இருக்கிறது?
இங்குமுதல்வர்கள், பிரதமர்கள் அல்ல மக்கள் தேர்வு செய்வது. கமிஷன் பாய்ஸ்களைத்தான் தேர்வுசெய்கிறோம். அப்படி அனைத்துத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள் அவர்கள்.
எல்லாமே தனியார் வசம் என்றால் சாராய ஆலைகளையும், சாராய கடைகளையும் அரசு நடத்தும் என்றால் அந்த அரசு நமக்குத் தேவையா? இவ்வாறு சீமான் பிரசாரம் செய்தார்.
-http://news.lankasri.com
சீமான் வெற்றி நிச்சயம்
இலவசமாக வழங்கினால் அவர்களுக்கு ஆதாயமில்லை. சாராயம் குடித்தால் அவர்களுக்கு ஆதாயம்! ஒரு நூல் நிலையத்தையே ‘நூடல்’ ஆக்கிவிட்டவர் அம்மா!