போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் ஓட்டம்

Kashmir-Mapகாஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் அதிஜன் பகுதியில் சிறுபான்மை சமூக பாதுகாப்பிற்கான பணியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் ஒன்றில் இருந்து எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக துப்பாக்கிகள் 2 என 4 துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது.  தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-http://www.nakkheeran.in

TAGS: