சென்னை: தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை. அவரைப் போன்ற பக்குவமான தலைவர் யாருமில்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக தனது ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “எல்லா மதத்திலும் சாதிய கொடுமைகள், சாதிய வன்முறை, பெண் அடிமைத்தனம்… எல்லா இடத்திலும் இருக்கு. புரட்சியாளர் அம்பேத்கர் போட்ட பாதையில்தான் நாம் நடை போட வேண்டும். அந்தப் பாதையில் நம்மை அழைத்துச் செல்ல தலைவர் திருமாவளவன் இருக்கிறார். அவர் கையைப் பிடித்துக் கொண்டு அம்பேத்கர் அவர்களுடைய பாதையில் நடை போட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. கட்டாயம்.
இந்த சூழ்நிலைக்கு மிக மிக அவசியமான ஒன்று. சாதி மறுப்பே தமிழர் விடுதலை. இதுதான் விடுதலைச் சிறுத்தைகளுடைய முக்கியமான கொள்கை. என்னுடைய முடிவும் எண்ணமும் கூட அதுதான். அப்படிப்பட்ட மாபெரும் புரட்சியாளரான அம்பேத்கரின் எண்ணங்களை உள்வாங்கி, அந்தப் போராட்டத்தின் வடிவத்தை தமிழ்நாட்டுக்குத் தகுந்தமாதிரி முன்னெடுத்துச் செல்வதில் தம்பி திருமாவளவனுக்கு இணை வேறு யாருமே இல்லை.
அவருடைய தலைமை மிக முக்கியம். தலைமைப் பண்பு என்பது ஒரு சிலருக்குத்தான் இருக்கும். வெறும் உணர்ச்சிவசப்படுவதல்ல தலைமைப் பண்பு. வெறும் உணர்ச்சி வசப்படுபவன் தொண்டனாக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அந்த உணர்ச்சிகளை வடிவமைத்து ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லும் தலைமைப் பண்பு ஒரு சிலருக்குத்தான் இருக்கும்.
அப்படிப்பட்ட தலைமைப் பண்பு தம்பி திருமாவளவனுக்கு இருக்கிறது. திருமாவளவனைப் பொறுத்தவரையில் சிந்தனையில் மிகப் பெரிய தெளிவு. உலகப் புரட்சியாளர்கள் அத்தனைப் பேரையும் படித்திருக்கிறார். அவர் மண் சார்ந்த விடுதலையை முன்னிறுத்தினாலும் கூட, உலகிலுள்ள அத்தனை புரட்சியாளர்களைப் பற்றியும் அவருக்குத் தெரியும். இந்தப் புரட்சியை முன்னெடுக்கும்போது, தங்கு தடையில்லாத துணிவு அவரிடம் இருக்கிறது.
மேடையில் நாம் பேசும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தடா, பொடா, என்எஸ்ஏ எல்லாம் வரும். மனசுக்குள்ள ஒரு பயம் வந்துட்டா புரட்சியை முன்னெடுக்க முடியாது.
ஆனால் தலைவர் திருமாவளவனைப் பொறுத்தவரையில் இந்த பயம் எதுவும் அவருக்கில்லை. மக்கள் விடுதலை, மக்களின் நன்மை, மண் சார்ந்த விடுதலை மட்டும்தான் அவருடைய எண்ணத்தில் இருக்கும். அதனால் ஆணித்தரமாக சொல்ல வேண்டிய கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் அற்புதமாகச் சொல்லி வருகிறார். அண்ணல் அம்பேத்கர் சொன்னது அதுதான். கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்… கற்பித்த பிறகுதான் புரட்சி செய்ய முடியும். கற்பிக்காமல் செய்தால் அது புரட்சியாக இருக்காது. வன்முறையாகத்தான் மாறும்.
திருமா தன் தோழர்களுக்கு கற்பித்த பிறகு ஒன்று சேர்க்கிறார்… புரட்சி செய்கிறார். இதுதான் தலைவர் திருமாவளவனின் சிறப்பு. அதேபோல தோழர்களை கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்வது. அவர் தலித் விடுதலையை நோக்கி மட்டும் செயல்படுகிறார் என்று மட்டும் யாரும் தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். காரணம், இதில் சாதி மறுப்புத்தான் முக்கியம்.
திருமாவளவன் மாதிரி மிகச் சிறந்த சிந்தனையாளர், புரட்சியாளர், விடுதலை வீரர் தமிழ்நாட்டுக்குத் தலைமை ஏற்கும் காலம் வந்தால், அது அவருக்கு நன்மை என்று சொல்ல மாட்டேன். தமிழக மக்களுக்கு நன்மை. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை. இப்படியொரு தலைமைதான் தமிழகத்துக்கு வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
இப்படியே நாலு பாக்கமா சீமான்,திருமாவளவன்,சகாயம்,
அன்பு மணின்னு தமிழன் வாக்குகளை பிரிச்சுருங்க அப்பத்தான் வந்தேறி கூட்டங்கள் ஆட்சியை மீண்டும் பிடிக்க வசதியா இருக்கும்!!!
புலிகேசி கூறுவது முற்றிலும் உண்மை. தேர்தலுக்கு பின் இத்தனை தமிழ் சார்ந்த கட்சிகளும் வெற்றி பெற்ற இடங்கள் ஒன்றாக கூட்டினால் அ தி மு க வும் தி மு க வும் தனி தனி வெற்றியைவிட அதிகமாக வென்றால் என்ன நடக்கும். தமிழ் சார்ந்த கட்சிகள் ஒன்றிணைத்து ஆட்சி அமைபார்களா அல்லது எந்த கட்சியாவது அ தி மு க அல்லது தி மு க வோடு கூட்டு அமைபார்களா? அனுபவப்படி நோக்கினால் இவர்களில் ஓரிரு கட்சி அவர்களோடு சேர்ந்து கூட்டு ஆட்சி செய்வார்களே தவிர . தேர்தலுக்கு முன் (அதாவது இப்போது) பேசுவதுபோல் தமிழ் தமிழ் என்று தமக்குள்ள இருக்கும் சிறிய வேற்றுமைகளை விவாதித்து சீர் செய்து கூட்டாக தமிழ் சார்ந்த ஆட்சி அமைப்பார்களா? பொறுத்திருந்து நம்பிக்கையோடு எதிர்பார்த்து இருப்போம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
இந்த சாதி மறுப்பாளர் தன் மான தமிழன் சத்யராஜ் தன் மகளை இந்த திருமணம் செய்யாம இருக்கும் தலைவர் திருமாவளவனுக்கும் தன்மகனுக்கு வேற சாதி பெண்ணுக்கும் திருமணம் செய்துவைப்பாரா இல்ல ஊருக்குதான் உபதேசமா?
சத்யராஜ் திடிர்னு பல்டி அடித்து விட்டாரே.தமிழகமே சீமானை நோக்குகிறது………………….
தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதில் திருட்டு திரவிடன்கள் கெட்டிகாரன்கள். அதுக்கு தமிழர்கள் துணை போவது வெக்க கேடானுது. வேதனைக்குரியுது . இந்த தடவை தமிழன் வெற்றி பெருவார்னு நம்புவோம்
தமிழன்தான் தமிழ் நாட்டை ஆழ வேண்டும் என்பது சரிதான் ஆனால் தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாமல் தனித் தனியே போட்டி இடுகிறான்.பிறகு மற்றவன் தான் ஆளவேண்டும்…?
திருமாவளவன் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துள்ளார் ஒரு கொள்கையில்லால் இடத்திற்கு இடம் நிறம் பட்சோந்தி திருமா வை விட தமிழ் தமிழன் என்று பேச்சிக்கும் மூச்சிக்கும் கதறும் சீமானின் கொள்கையே சிறந்தது இதுவரை சீமானுக்கு கொடிப் பிடித்த சத்தியராஜ் திடீர் என்று திருமா வுக்கு துதிப் பாட துவங்கி விட்டார் சுத்த அயோக்கியத்தனம் விலைப் போகும் குழப்பவாதிகள் உள்ளவரை தமிழர்களை காப்பாற்றுவது கேள்விக் குறிதான்? மனிதனுக்கு சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் இவர் மூலமாக சூழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படுகிறது இவர்கள் நடுவில் சகாயம் போன்ற விலைபோகாத மனிதர்களும் உண்டு நிட்சயம் தமிழன் வென்று வருவான் நாம் தமிழர் கட்சி வாழ்க !!
தெலுங்கர் வைகோ கூட்டனியில் அவர் முதல்வர் வேட்பாளார்
கூட இல்லையே?. அவர் வேண்டுமானால் அவர் ஜாதிகட்சிக்கு தலைமை தாங்கட்டும். தமிழர்களை தலித் என்ற போர்வையில் பிரித்த அறிவாளி இவர். தமிழ் இனம் இவரை காரி துப்ப வேண்டும்
https://youtu.be/OBXzlQeg1Pc