2ஜி சாதிக் பாட்சாவை கழுத்தை நெரித்து கொன்றோம்: பிரபாகரன் திகில் பேட்டி

sathiqஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள, சாதிக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தோம் என கொலையாளி பிரபாகரன் அளித்துள்ள திடுக்கிடும் பேட்டியால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

பிரபாகரன் தனது பேட்டியின் போது, “நான், தமிழர் நீதிகட்சியின் தலைவர் சுப.இளவரசனுக்கு உதவியாளராக இருந்தேன்.

அந்த நெருக்கத்தின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானேன். அப்படிதான் எனக்கு சாதிக் அறிமுகமாக, அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்து வந்தேன்.

2ஜி வழக்கு சர்ச்சையாக, சிபிஐ-யில் சாதிக் உண்மையை சொல்லிவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து நான், ஆ.ராசாவின் அக்காள் மகன் பரமேஸ்குமார் ஆகியோர் சென்னை தி.நகரில் இருக்கும் சாதிக் வீட்டுக்கு சென்றோம்.

அப்போது அங்கு ஜாபர் சேட் எனும் நபர் இருந்தார். பேசிக்கொண்டிருக்கும் போது வார்த்தைகள் வலுக்க, ஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள, சாதிக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தோம்.

அதுவரை ஜாபர் சேட் போலீஸ் அதிகாரி என்பது தெரியாது. அதன்பிறகு அவரைப் பற்றி தெரியவந்தது. சிறிது நாட்களுக்கு எனக்கு கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்.

அதன்பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தனர். இதையெல்லாம் பலமுறை உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த கண்ணப்பன், சிபிஐ அதிகாரிகளிடம் சொன்னேன் அதை காதில் வாங்காமல் என்னை விரட்டி விட்டார்கள்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பரமேஸ்குமார், எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்” என்றார் பிரபாகரன்.

இதையடுத்து, ம.தி.மு.க தலைவர் வைகோ, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “சாதிக்பாட்சா கொலை பின்னணியை விசாரிக்கவேண்டும். 2 ஜி ஊழலில் தி.மு.க பிரமுகர்களை காப்பாற்றவே அவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், தற்கொலை என்று மாற்றிவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: