தலித் தலைவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்த பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல்

tarun vijay

இந்தியாவின் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள், தலித் தலைவர்களுடன் நுழைய முயன்ற பாஜக எம்.பி தருண் விஜய் மீது உள்ளுர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசோரி என்ற இடத்தின் அருகே சில்கூர் தேவ்தா என்ற கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் பா.ஜ.க. எம்.பி, தருண் விஜய், சில தலித் தலைவர்களுடன் நுழைய முயன்றுள்ளார். குறித்த கோவிலுக்குள் பின்தங்கிய ஜாதி மக்கள் நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது

தலித் தலைவர்களுடன் தருண் விஜய் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் உயர் சாதியை சேர்ந்த ஒரு கும்பல், அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் தருண் விஜய் உட்பட தலித் தலைவர்களும் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் அவரது கார் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டது.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: