சென்னை: ஆழ்வார்பேட்டையில் மூரே சேட் சாலையில் தொழிலதிபர் தீனதயாளனின் பங்களா வீட்டில் நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.50 கோடி மதிப்பிலான 54 கற்சிலைகள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இருந்த மான்சிங், குமார், ராஜாமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தீனதயாளன் தலைமறைவாகி விட்டார்.
பின்னர் அவரது வீட்டில் பூட்டிக்கிடந்த இரண்டு அறைகளின் கதவை உடைத்து இன்று சோதனை செய்யப்பட்டது. இதிலும் ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2 அடி முதல் 6 அடி வரை உயரம் கொண்ட இந்த சிலைகளை தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தீனதயாளனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் சோழர் காலத்து சிலைகள் என்று அவற்றை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர் தெரிவித்தார். மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இதுபோன்ற சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே தீனதயாளனின் வீட்டில் நாளையும் சோதனை நடத்தப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
-http://www.maalaimalar.com
வடுக ஆட்சியில் தமிழர்களின் வரலாறுகள் அழிக்கபட்டு வடுகர்களின் வரலாறுகள் புரட்டுகளுடன் பதியபட்டு கட்டிகாக்கபடுகிறது …
பாண்டியர்களின் நினைவிடங்கள் அரண்மனைகள் பராமரிப்பின்றி காடுமண்டிகிடக்க சூத்திர வடுகர்களின் கல்லறைகள் அரன்மைகளாக ஜொலிக்கிறது ..
இதில் ஈடுபட்டவர்களும்
தமிழர்களும் தானே இதற்கும் இன வாரியான கருத்தா ? என்ன கொடுமை இறைவா !!