தமிழ்நாட்டில் பெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்றதாக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரூர் அருகே கோவிலில் பெற்ற மகனை தந்தை ஒருவர் நரபலி கொடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மக்கள் அவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழல் நிலவியது.
எனவே மகனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன், அமாவாசை என்பதால் இரவில் எங்களுக்கு சொந்தமான மினி வேனில் வந்தேன்.
நான் போதையில் இருந்ததால் பொதுமக்கள் தப்பாக நினைத்து பொலிசிடம் ஒப்படைத்து விட்டனர்.
என் மகனை நானே எப்படி கொலை செய்வேன், நான் அரிவாள் எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதனை நம்ப மறுத்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://news.lankasri.com


























அம்மா நரபலி!