தமிழக சட்டசபைகூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் ரோசைய்யா உரையாற்றினார்.
38 பக்கங்கள் கொண்டஅவரது உரையில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு..!
- கச்சத்தீவை மீட்டு பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.
- மீனவர்களின் நலனுக்காக வழங்கப்படும் உயர்த்தப்பட்ட உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
- அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற ஏழை எளிய மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- அனைத்து இடையூறுகளும் களையப்பட்டு தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.
- அமைதி, செழிப்பு, வளர்ச்சியை உறுதிப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார்.
- தேர்தல் வாக்குறுதிகளை பதவியேற்ற முதல் நாளிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார்.
- விவசாயிகளின் நலன்களை மையப்படுத்தி வேளாண்துறை மேம்பாட்டுக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- வேளாண்துறை எந்திரமயமாக்கல், நீரைச்சேமிக்கும் நீர்ப்பாச முறைகள் தொடரும்.
- முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழும்.
- கிரானைட் மற்றும் தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கால்நடை மேம்பாட்டுத்துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும்.
- ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- நெம்மேலி, போரூர் பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
- சின்னமலை- விமான நிலையம், ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
- வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரை மெட்ரோ பணி ரூ.3,770 கோடியில் செயல்படுத்த ஒப்புதல்.
- வெள்ள பாதிப்புகளைத் தடுக்க விரிவான வெள்ளத் தடுப்பு திட்டங்களை அரசு விரைவாக தயாரிக்கும்.
- அம்மா அழைப்பு மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும்.
- காவல்துறையை நவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
- தமிழகத்தை அமைதிப்பூங்காவாகத் திகழச் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
- காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுதந்திரத்துடன் கையாள உரிய வழிவகை செய்யப்படும்.
- உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயிர் வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படும்.
- தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு இலங்கை அரசு மூலம் தீர்வு காண மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.
- முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறப்படும்.
- இலங்கையில் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமைகள் கிடைப்பதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கப்படும்.
- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
- தமிழகத்தில் உயர்கல்வி பயில அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
- இலங்கைக் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்திறன் உருவாக்கப்படும்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்.
- உயர்கல்வி பயில மாணவர்களுக்கான நிதி உதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்.
- சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும்.
- சென்னை அருகே மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மருத்துவ பொதுநுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர்ந்து பாடுபடுவோம்.
-http://news.lankasri.com
பேசி பேசியே காலத்தை கடத்தி விடுவான்கள்- கையால் ஆகாத ஜென்மங்கள்.