என்னை சாகடித்து விடுங்கள் என கெஞ்சினேன்: பியூஷ் மனுஷ் பரபரப்பு பேட்டி!

piyush_manush_123சிறை கண்காணிப்பாளரிடம் தன்னை இப்படி கொடூரமாக அடிப்பதற்கு பதில் சாகடித்து விடும் படி கெஞ்சியதாக ஜாமீனில் வெளியே வந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

பாலம் கட்டுமான பணிக்கு இடையூறு செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பியூஷ் மனுஷ், சேலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, சிறைக்குள் சென்றதும் சாதி என்ன என்று காவலர்கள் கேட்டனர், பின்னர் சிறை கண்காணிப்பாளர் அறைக்கு என்னை அழைத்து சென்று கொடூரமாக தாக்கினர்.

வலி தாங்க முடியாத நிலையில் இப்படி என்னை அடிப்பதற்கு பதில் சாகடித்து விடும் படி கண்காணிப்பாளரிடம் கெஞ்சினேன்.

மேலும், நான் தேசிய கொடி எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக சிறை முழுவதும் தவறான செய்தி பரவியது. பின்னர் பத்திரக்கையில் வந்த செய்தியின் மூலம் நான் பாலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்தும் என்னை தொடர்ந்து கொடூரமாக தாக்கினர். நான் 1997 முதல் கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் மரங்களை நட்டு வருகிறேன்.

இதுவரை இதுபோன்ற துன்பத்தை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. சிறையில் என்னை தாக்கியதற்கான காரணத்தை சிறை கண்காணிப்பாளர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என பியூஷ் மனுஷ் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: