இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. அதன் பேரில் இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் அந்நாட்டு மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரசவீரா கூறுகையில், கைதான மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இலங்கை கடல் பகுதியில் நிபந்தனையின் பேரில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்ற செய்தி உண்மைக்கு மாறானது என்றார்.
-http://www.nakkheeran.in