இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் என இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் நடராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மீனவர்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடவில்லை.
தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதனால் இலங்கை மீனவர்களும் கடலில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com