நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 70 தலித் குடும்பங்களும் இதேபோன்ற காரணத்திற்காக மதம் மாற முடிவு செய்துள்ளனர். இதனால் இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவுகிறது.
பழங்கள்ளி மேடு கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர ஐந்து நாள் கோவில் திருவிழாவில் தங்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. இது காலம் வரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து இவர்கள் கோவிலுக்கு வருவதற்கும், கோவில் விழாவில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனர். இனியும் பொறுக்க முடியாமல்தான் இவர்கள் மதம் மாற முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் மதம் மாறுவது ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 6 தலித்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி விட்டனர். முறைப்படியாக அவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தலித் மக்களை அணுகிப் பேசியுள்ளனர். திருக்குரான் நூலைக் கொடுத்து பேசினர். அதேபோல கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்களும் அவர்களை வந்து பார்த்தனர் என்று கூறினர். இந்த நிலையில் இந்த மதமாற்றத்தைத் தடுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை களம் இறங்கியுள்ளனவாம்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தலித் மக்களை அணுகிப் பேசியுள்ளனர். திருக்குரான் நூலைக் கொடுத்து பேசினர். அதேபோல கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்களும் அவர்களை வந்து பார்த்தனர் என்று கூறினர். இந்த நிலையில் இந்த மதமாற்றத்தைத் தடுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை களம் இறங்கியுள்ளனவாம்.
இந்தக் கிராமத்தின் நிலை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், எங்களது இளைஞர்களை எங்களாக் கட்டுப்படுத்த முடியவில்லை. மத மாற்றத்தில் அவர்கள் உறுதியாக உள்ளனர். எங்களது உரிமைக்காக நாங்கள் பல விதங்களிலும் போராடிப் பார்த்து விட்டோம். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எங்களது அடிப்படை உரிமையை பெற்றுத் தர தவறி விட்டன. எங்களால் எங்களது கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்குள் நுழையக் கூட முடியவில்லை.
ஆண்டுதோறும் நடைபெறும் ஐந்து நாள் விழாவில் ஒரு நாளை எங்களுக்கு ஒதுக்கக் கோரி வருகிறோம். அந்த ஒரு நாள் மண்டகப்படியை வைக்க அனுமதி கோரி வருகிறோம். ஆனால் அந்த உரிமையை தர மறுத்து வருகின்றனர். எனது பெற்றோரும், தாத்தாக்களும் கொத்தடிமைகளாக இருந்தபவர்கள். ஆனால் எனது தலைமுறை அப்படி இருப்பதை நான் விரும்பவில்லை. தீண்டாமையும், அவமானமும் எனது பிள்ளைகளைத் தீண்டுவதை நான் விரும்பவில்லை. மதமாற்றம் மட்டுமே எங்களுக்கு விமோச்சனம் தரும்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அப்துல் ரஹ்மான் கூறுகையில் கிராமத்திலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து சில தொண்டர்கள் அங்கு சென்றனர். அவர்களிடம் மதமாற்றம் அவ்வளவு சுலபம் அளல். இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். ஏதோ ஒரு கோபத்திற்கு இஸ்லாமுக்கு வந்து விட முடியாது. முதலில் மதம் குறித்துப் படியுங்கள், பிறகு எங்களிடம் வாருங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளோம். திருக்குரான் நூல்களையும் அவர்களிடம் கொடுத்துள்ளோம். அவர்களில் 6 பேர் இஸ்லாமுக்கு மாறுவதில் தீவிரமாக இருந்தனர். அவர்களின் ஈடுபாட்டைப் பார்த்து நாங்களும் அவர்களுக்கு சம்மதம் கொடுத்தோம். தற்போது அவர்கள் இஸ்லாமுக்கு வந்துள்ளனர் என்றார்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில் இந்த விவகாரத்தில் யாரும் தலையிடத் தேவையில்லை. இது அரசு கோவில், அரசும், காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிக் கொண்டுள்ளனர். விரைவில் அரசு இதில் நல்ல முடிவை எடுக்கும். தலித்களுக்கு கோவில் விழாவில் இடம் தர மற்ற சமுதாயத்தினருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார் அவர்.
இதேபோல கரூர் மாவட்டத்தில் உள்ளது நாகப்பள்ளி கிராமம். இங்கும் இதே கதைதான். இதனால் 70 தலித் குடும்பங்கள் முஸ்லீம்களாக மாற முடிவு செய்துள்ளனர். இதில் என்ன கொடுமை என்றால் தலித் மக்கள் தங்களுக்காக கட்டிய கோவிலை இன்னொரு சமூகத்தினர் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகின்றனராம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோவில் குழுவின் தலைவர் வெற்றிவேல் கூறுகையில், எனது தந்தை கட்டிய கோவில் இது. மற்ற கோவில்களில் எங்களை அனுமதிக்காத காரணத்தால் எனது தந்தை இந்தக் கோவிலை கட்டினார். ஆனால் தற்போது இலங்கையிலிருந்து திரும்பி வந்துள்ள சிலர் இக்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு எங்களை விரட்டி விட்டனர். போலீஸோ அல்லது மாவட்ட நிர்வாகமோ எங்களுக்கு உதவ முன்வரவில்லை. கோவிலை அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு போய் விட்டனர். இதனால் நாங்கள் மதம் மாறும் முடிவுக்கு வந்துள்ளோம் என்றார்.
சம்பந்தப்பட்ட ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலானது கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் நிதியுதவியைப் பெற்று இக்கோவிலைக் கட்டியுள்ளனர். இந்தக் கோவிலை தலித் அறக்கட்டளைதான் நிர்வகிக்கிறது. ஆனால் தற்போது ஜாதி இந்துக்கள் தலித்துகளை ஒதுக்கி வருகின்றனராம்.
நாகப்பள்ளி கிராமத்தில் ஒரு முஸ்லீம் வீடு கூட கிடையாது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அருகாமையில் உள்ள அரவக்குறிச்சியில் 40,000 முஸ்லீம் குடும்பங்கள் நிம்மதியாகவும், கெளரவமாகவும் வாழ்வதைப் போல நாங்களும் கெளரவமாக வாழ நினைக்கிறோம் என்று கூறுகிறார் வெற்றிவேல்.
தமிழகத்தில் கடந்த 1981ம் ஆண்டு நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் மிகப் பெரிய அளவில் தலித் சமுதாயத்தினர் இஸ்லாமுக்கு மாறிய சம்பவம் நடைபெற்றது. இந்திய அளவில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 800 தலித் குடும்பங்கள் அப்போது மொத்தமாக இஸ்லாமுக்கு மாறினர். அதைத் தடுக்க வாஜ்பாய், மற்றும் பல அரசியல்வாதிகள் பெஜாவர் மடாதிபதி உள்ளிட்ட நாட்டின் மிகப் பெரிய மடாதிபதிகள், எல்லாம் மீனாட்சிபுரத்துக்குப் படையெடுத்து வந்தனர். ஆனால் ஜாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று தலித் மக்கள் கூறி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இப்போது நாகை மற்றும் கரூர் மாவட்ட கிராமங்கள் மீண்டும் மத மாற்ற பரபரப்புக்கு அடிக்கல் நாட்டியுள்ளன.
-http://tamil.oneindia.com
சந்திரபாபுவும் ராஜசேகர ரெட்டியும் எப்படி தமிழகம் வந்து முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் தெலுங்கானா பிரிக்கப்படாமல், தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று ஒற்றுமையாக இங்கு வந்து கேட்டுச் சென்றனர் ???
நம் பகுத்தறிவாளர்களும், ச்சீ ச்சீ , நீங்க ரெண்டு பேரும் சாதிப்பெயர முன்ன வச்சிக்கிட்டு, தெலுங்கானா மக்களை ஒடுக்கி அடிமையாகவே வைக்கனும்னு நினைக்கிறது பட்டவர்த்தனமா இருக்கு, அதனால ரெட்டி, நாயுடு ரெண்டையும் எடுத்துட்டு வந்து மனுக் கொடுங்க என்று சொல்லவில்லை.
இந்த வகையான போலி சீர் திருத்தம் எல்லாம் தமிழனுக்குத்தான். சாதிப் பெயர் எடுத்துட்டா சாதி ஒழிஞ்சிடுச்சி என்று நம்மை நம்ப வைத்து, முகமூடி அணிந்த வடுகர்கள் இன்று நம் வாழ்வாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று அனைத்தையும் சுரண்டி வருகின்றனர்.
இதற்கு சாதிப் பெயர் அடையாள அழிப்பு என்பது வசதியானதாகிவிட்டது. பின்னர் தமிழ்ச் சாதிகளுக்கு மட்டுமே அட்டவணை போட்டு கலவரம் வருவதெல்லாம் அவர்களின் கையில் இருக்கும் ஆட்சி அதிகாரம் கொண்டுதான்.
குறிப்பு : 1825 வாக்கில் வாழ்ந்த பாண்டிச்சேரி துபாஷ் திரு.ஆனந்த ரெங்கம் பிள்ளை அவர்களை தமிழன் அல்ல தெலுங்கன் என்று வரலாறு திரித்தாகிவிட்டது, மதுரை மீனாட்சி அம்மன் பிறப்பால் தெலுங்குப் பெண்மணி என்றும் ஆவணப்படுத்திவிட்டர்கள்.
இப்பொழுது தமிழர் நில, வாழ்வு, மண் உரிமைகளும, ் அரசியல் உரிமைகளும் பறிக்கப்பட்ட பின் சொந்த மண்ணில் அகதியாய் நிற்கும் நிலையில் நாம் இழப்பதறு என்ன இருக்கின்றது ???? சொல்லுங்கள்.(நன்றி காசி ) மண்ணின் மூத்த குடிகளை வந்தேறி ஆரிய வடுக ஆடசியில் அவர்களின் அடையாளங்களை சிதைத்துவிட்டு மாற்று மாதங்களுக்கு விரட்டி அடித்துவிட்டு தமிழர் மண்ணை தமதாக்கி இலகுவாக மதமாறிய தமிழனையும் அழித்து அகண்ட தெலுங்கு தேசத்துக்கு (சீமந்திரம், ஆந்திரா,பாண்டிசேரி ,தமிழகம் ,கன்னட கேரளா மண்ணிலும் சில பகுதிகள் ,இலங்கை )இந்த பகுதிகள் அனைத்தும் வடுக ஆடசியில்தான் உள்ளது ..பேசும்மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் வடுக கூட்டு உறவு நூற்றாண்டுகளாக தொடர்கிறது .. வழிவகுக்க நீண்டகால அஜெண்டாவோடு வடுக்ககூடிடம் !
தமிழர் எழுச்சிபறை அவர்களே தெலுங்கன், மளயாளி, ஏன் இந்தியாவில் உள்ள அத்தனை இனங்களும் சாதி பேரோடு இருக்காங்க. மலேசிவிலும் அதே நிலைமை .. தமிழர்கள் மட்டும் சாதி பேரு வைக்க கூடாதா ? ஏன் என்று கொஞ்சம் சொல்லுங்க .. தமிழன் இழிச்சவயானா இல்லை எல்லாம் தெரிந்த மேதாவிங்களா ? சாதிய ஒழிக்குறேனு தமிழ் இனத்தையே அழிக்க நினைக்குறாங்களா? சமீபத்தில் தமிழ் அறிஞர் குணா எழுதிய திரவிடத்தால் வீழ்ந்தோம் , தமிழின மீட்சி . அதோடு அறிஞர் அரிமாவளவன் எழுதிய எழுதிய நெருப்பு விதைகள் புத்தங்களை படித்தேன் நீங்க சொல்வதும் அறிஞர் குணா அறிஞர் அரிமாவளவன்சொல்வதும் ஒரே மாதி இருக்கு . கொஞ்சம் விளக்க முடியுமா ?
தங்களை கோவிலில் அனுமதிக்கவில்லை என்று மதம மாறுவது மிகவும் தவறு என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்களாகவே ஒரு கோவில் கட்டுங்கள்- திருவள்ளுவரை வைத்து போற்றுங்கள். ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும். மதம் மாறி சில சகாயங்கள் ஆகலாம் — ஆனால் நீங்கள் தமிழர்கள்– உங்களுக்கு காலை கலாச்சாரம் இருக்கிறது
மொழி வளம் உள்ளது. பல ஆயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது– நீங்கள் தமிழர்கள் –ஏன் அதை விட்டு கொடுக்க வேண்டும்? மதம் மாறுவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கிறீர்கள்.
“ஜாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று வேறு மதத்திற்கு மாறுகிறீர்கள் சரி.
இப்படி மதம் மாறியவர்களை “தமிழர்கள் அல்ல” என்று முத்திரை குத்துவதற்குகென்றே தற்பொழுது தமிழகத்தில் தமிழ் இனவெறியர்கள் கூட்டம் ஒன்று இருக்கிறதே.
இந்த தமிழ் இனவெறியர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க சாதி சான்றிதழுடன் இன சான்றிதழையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சாதிக்காக மதம் மாறி இனத்திற்காக மாநிலம் மாறும் நிலை ஏற்படலாம்.
அப்படியே நீங்க அவர்களுக்கு சாதி சான்றிதழுடன் இன சான்றிதழையும் வாங்கி கொடுத்தீங்கனா நன்றியோடு இருப்பார்கள்
பணம் விளையாடுகிறது. இங்கு பதவிக்காக மதம் மாறும் ஈனங்கள் இருக்கின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலை எனக்கு புரிகிறது. மனதில் உறுதி இருந்தால் மதம் மாறு வது தேவை இல்லை.
மதம் என்பது ஆன்மீகம் சார்ந்து மனிதனை மாண்புள்ளவனாகவும், அவன் மனதை பண்படுத்தி அவன் குண நலன்களை மேம்படுத்துவதற்காகவுமே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சக மனிதனை ஆதியில் அவன் புரிந்த தொழிலை வைத்து பாகுபடுத்தி, நீ தாழ்ந்தவன், எங்களுக்கு அடிமை, நாங்கள் இறைவனின் பிரதிநிதி நீ அவனுக்கு வேண்டாதவன் என்று கூற எவனுக்கும் அருகதை இல்லை, அப்படி கூறுபவன் உண்மையில் ஒரு நல்ல மனிதனாகவோ, மேன்மை மனம் படைத்தவனாகவோ நிச்சயம் இருக்கமாட்டான், இவையெல்லாம் இறைவனா நேரில் வந்து சொன்னான் ?, அவன் பெயரை உபயோகித்து வயிறு வளர்க்கும் சுயநலமிகளின் செயலாகத்தான் இது இருக்கும், இன்னொரு கொடுமை, நீ தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்டாய், நீ ஏழையாகவோ/ சிரமத்திலோ இருந்தால் அதிலிருந்து மீளக்கூடாது, அது உனது “கர்மா” , உனக்கு யாரும் உதவக் கூடாது, அப்படி உதவினால் உன் “கர்மா” அவர்களைத் துரத்தும், நீ இப்பொழுது இப்பிரச்சனைகளை அனுபவிக்காது மீண்டுவிட்டால் மீண்டும் மறுபிறவி எடுத்து, இதே கக்ஷ்டத்தை அனுபவிப்பாய்” என்பதெல்லாம் நிச்சயம் இறைவனின் கூற்றாய் இருக்காது, அப்பாவிகளை அடிமைப்படுத்த நினைப்பவனின் சுயநல சிந்தனையாகவே இருக்கும். எல்லோரும் என் குழந்தைகள் என்றார் ஏசு பிரான், எல்லோரும் சகோதரர்கள் என்றார் நபி, அவர்களுக்கெல்லாம் முந்திய நம் மதம் மட்டும் இவன் என் முகத்திலிருந்து பிறந்தான், இவன் என் காலடியிலிருந்து பிறந்தான் என பாகுபடுத்துமா ? எல்லாம் இடைச்செருகல்கள். இதையெல்லாம் மீறி சொந்தமாய் ஆலயம் அமைத்து வழிபடும் உரிமையும் இம்மக்களுக்கு மறுக்கப்படும்பொழுது அவர்கள் என்ன செய்ய முடியும் ? பாவம் இவர்கள், வேறு என்ன வழி உண்டு இவர்களுக்கு ? இப்படி அடிமைப்படுத்தப்படும், சொந்த மதத்திலேயே புறக்கணிக்கப்படும், இறை வழிபாட்டில் ஒதுக்கப்படும் மக்கள் தங்களை நேசிக்கும் மதத்தினரை நாடி இறை நெறியில் ஈடுபடுவது எவ்வகையில் தவறாகும் ? இந்த மக்கள் புத்திசாலிகள் நமது வாழ்த்துக்களை இவர்களுக்கு பதிவு செய்கிறோம், வாழ்க !!
இந்துமதம் தமிழனை பிரித்து அவன் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் தடுக்கிறது .இந்த மத மாற்றம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு .எந்த ஒரு இந்து மற்றொரு இந்துவை ஆலயத்தில் நுழைய தடை விதிக்கிறானோ அவனை சிறையில் இட வேண்டும் .ஆலயங்கள் நம் இனத்த்தின் ஒற்றுமையின் அடையாளங்களாக உருவாக்க வேண்டுமே அன்றி வேற்றுமைக்கு வழிவகுக்கும் இடமாக அமையக்கூடாது .
சின்னப்பையன் !
முன்பு “மீனாட்சிபுரம் மதமாற்றம்” பற்றி எழுதியபோது, நீர்தான் “மதம் மாறியவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறி விட்டார்கள்” என்றொரு அதிமேதாவி கருத்தை வெளியிட்டீர்கள். மதம் மாறியவர்களை மீண்டும் அவர்களது மதத்த்திற்கு மாற்றுவதற்கான திறமை உள்ள நீங்களே மதம் மாறியவர்களுக்கு “இன சான்றிதழையும்” வாங்கி கொடுங்கள் கேட்பது ஏனோ ? என் இந்த திடீர் மனமாற்றம் ?
ஒருவேளை செம்பருத்தி இந்த கட்டுரையில் “… அதைத் தடுக்க வாஜ்பாய், மற்றும் பல அரசியல்வாதிகள் பெஜாவர் மடாதிபதி உள்ளிட்ட நாட்டின் மிகப் பெரிய மடாதிபதிகள், எல்லாம் மீனாட்சிபுரத்துக்குப் படையெடுத்து வந்தனர். ஆனால் ஜாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று தலித் மக்கள் கூறி விட்டனர்” என்று எழுதி உங்களுடைய “அதிமேதாவி திறமையை” வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டதால்தானோ ?
en thaai thamizh !
நீங்கள் கூறுவது உண்மைதான். பணத்திற்காக மதம் மாறும் ஈனங்கள் இருக்கின்றன. அதிலும் தமிழ் நாட்டில் தமிழனே (இந்து) பணத்திற்காக இந்த தரகர் வேலையில் ஈடுபட்டிருப்பதுதான் கொடுமை.
வாஜ்பாய் மற்றும் ஹிந்துத்வா தலைவர்களிடம் மீனாட்சிபுரத்தில் மதம் மாறியவர்கள் கூறிய வார்த்தைகள் “மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத மதத்தில் இருப்பதைவிட வேறு மதத்திற்கு மாறுவதே மேல்”.
“ஜாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க” என்பது தமிழ் பற்றாளர்களால் மரியாதையாக “ஜாதி இந்துக்களை” ஆதரிக்கும் வார்த்தையாகும்.
ஏன் வேறு மதத்திற்கு மாற வேண்டும்? ஜாதி இந்துக்களை தூக்கி எறியுங்கள். திருவள்ளுவரை கொண்டாடுவோம். திருக்குறளை பாடுவோம். ஜாதி இந்துக்களை தீண்டாதீர்கள். நாம் தமிழர்களாக வாழ்வோம். ஆனாலும் இந்தியாவில் இது முடியுமா என்று தெரிய வில்லை– வயிறு காய்ந்தால் எல்லாம் பறந்தோடிவிடும். அதுதான் கடினம். ஜாதி இந்துக்களை நாம் தீண்டாதவர்களாக பார்க்க வேண்டும். என் தாய் தான் என் முதல் கடவுள். இந்து மதத்தின் சாங்கியம் மற்றும் உள்ள மூட நம்பிக்கைகளை நான் கடை பிடிப்பது கிடையாது. பகுத்தறிவுக்கு ஒவ்வாதத்தை ஏற்பதில்லை. ஆண்டவன் என்று இருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும். ஆணடவன் ஆணா பெண்ணா? ஆனால் அந்த மதத்தில் இருக்கும் அழுக்குகளை களைவது யார்? இவ்வளவு அநியாயம் செய்யும் அந்த மதம் தேவையா? நமக்கு ஜாதி மதமும் தேவை இல்லை — பெரும்பாலான தமிழர்களுக்கு அடிமை புத்தி – பாரதியார் போன்றவர்களுக்கே மரியாதை இல்லை. அம்பேத்கார் புத்த மதத்தில் சேர்ந்ததும் இந்த ஜாதி இந்துக்களினால் தான். இந்த உயர்வு தாழ்வினால் தான் தென் கிழக்கு ஆசியாவே முஸ்லிமாக வும் புத்த மதத்திற்கும் மாறியது.இல்லாவிடில் நமக்கு இவ்வளவு தொல்லைகள் இருக்காது.
en thaai thamizh !
நீங்கள் கூறுவதுபோல் “ஜாதி இந்துக்களை” தூக்கி எறியலாம் ஆனால் தமிழகத்தில் முடியுமா என்பது சந்தேகம். ஏனென்றால் தற்போதைய தமிழக “தலித்” அரசியல் தலைவர்கள் “தலித் சமுதாயத்தில் சார்ந்தவர்களை “உயர்ந்தவர் – தாழ்ந்தவர்” என்று அவர்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்தி அரசியலில் வலம் வருவோரை, “தலித் ஓட்டுக்காக”, “ஜாதி இந்துக்கள்” அரசியல் கட்சி தலைவர்கள் “கூட்டணி” என்ற பெயரில் மறைமுகமாக ஆதரிப்பதில் தவறுவது இல்லை.
“ஜாதி இந்துக்கள் அடக்குமுறை” என்று கூறும் தலித்துக்கள் இன்றுவரை “தலித் அடக்குமுறைக்கு” எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை.
ஒருவேளை “உயர்ந்த தலித்” அரசியல் தலைவர்கள் அரசியல் ஆதரவு, பணபலம் மற்றும் படைபலம் கொண்டவரர்களாக இருப்பதனால்தானோ என்னவோ ?
திராவிட இயக்கத்தின் தமிழர் அழிப்பு சதித் திட்டங்களை ஆழமாக ஆய்வு செய்து நான்கு பாகங்களாக தமிழர் உலகம் வெளியிடுகிறது. அதன் முதல் பாகம் இது. பாருங்கள், பரப்புங்கள்!
https://www.facebook.com/paari.saalan/videos/1063134247068530/
தெலுங்கரின் சோசியல் எஞ்சினீரிங்!
திராவிட இயக்கத்தின் தமிழர் அழிப்பு சதித் திட்டங்களை ஆழமாக ஆய்வு செய்து நான்கு பாகங்களாக தமிழர் உலகம் வெளியிடுகிறது. அதன் முதல் பாகம் இது. பாருங்கள், பரப்புங்கள்!
தீண்டாமைக்கும் சாதிவேற்றுமைகளுக்கும் வியநகர தெலுங்கு ஆட்ச்சிக்கு பிறகே தமிழகத்தில் உருவாக்கப்படட நோய்கள் ..
ஒட்டுமொத்த தமிழர்களின் சிக்கல்களுக்கும் வடுகர்களே காரணம் என்பதை மேலே உள்ள காணொளி புரியும்படி தெளிவாக கூறுகிறது ..
Anwar Deen
தலித்துகள் எந்த மதத்திற்கும் மாறாதீர்கள்.
ஒரு இஸ்லாமிய லெப்பையின் எச்சரிக்கை.
உணர்ச்சிவசப்பட்டு என் தாத்தன் எடுத்த முடிவால். இஸ்லாமிய தீண்டாமையில் லெப்பைகளாக ஒதுக்கப்படுகிறோம். சாதி வெறி, மதவெறியை தூக்கி எறிந்துவிட்டு மனிதர்களாக வாழுங்கள்.
மனிதம் மட்டுமே சிறந்தது.
அக்கரைக்கு இக்கரை பச்சை.
உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது தவறு
என் தாத்தா ஒரு பறையன்.
நாங்கள் தலித் பிரிவை சேர்ந்தவர்கள். என் அப்பா கருப்பு சாதி என்பதால் பெண் கிடைக்காமல் 40 வயதில் திருமணம் செய்தார். நான் வீட்டில் மூத்த மகன். எனக்கும் இப்போது 40 வயது.
கருப்பு சாதி என்பதால் பொண்ணு கிடைக்காமல். எவ்வளவோ கேட்டும். தன்னை சாதி மறுப்பாளன் என சொல்லிக்கொள்பவன் எல்லாம்
கருப்பு சாதியா? என ஏளனமாக பார்க்கிறார்கள். என் தங்கைகளுக்கு மாப்பிள்ளைகளும் கருப்பு சாதிக்குள் மட்டும் தான்.
சாதி மறுப்பு எல்லாம் வீட்டின் வெளியேவும், …வாசல் உள்ள மட்டும் தான். அவனவன் பொண்ணுக்கு மாப்பிள்ளை அவனவன் பிரிவுக்குள்ள தான். என் பாட்டி இறப்புக்கு கருப்பு சாதிக்காரன் மட்டுமே வந்தார்கள்.
பேருக்கு தான் பாய்.
கருப்பு சிவப்பு சாதி எல்லாம் இங்குண்டு.
தலித் மக்களே ஏமாறாதீர்கள்.
பரம்பரை பாரம்பரியத்தை தொலைத்துவிடாதிர்கள்.
தமிழர் எழுச்சிப்பறை, சரியாகச் சொன்னீர். அவன் கிறிஸ்துவனாக மாறினாலும் அஙகேயும் ஜாதி உண்டு! பேசாமல், இருக்கின்ற இடத்திலிருந்தே பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் சாதிக்கும் தனி பெருமை இருக்குதல்லவா? ராவ் , ரெட்டி,மேனன், இன்னும் நிறைய இருக்காங்க. இவர்கள் தங்கள் சாதி பெருமை பேசினால் அவர்களுக்குள் பிரச்சனை வருவதில்லை. ஒற்றுமை இருந்து வளமா இருக்காங்க . ஆனால் தமிழன் சாதி பெருமை அவர்களுக்குள் பேசினால் அடித்து கொள்கிறார்கள் .. இதுக்கு காரணம் மற்ற இனம் என்று எப்படி அவர்களை குறை சொல்ல முடியும்? முழு பூசணி காயை சோற்றில் மறைப்பது மாதிரி இல்லையா?
ஐயா ராஜ நாகம் அவர்களே– தமிழுக்கு சாதி கிடையாது– இந்து தமிழர்கள் தான் சாதியை கட்டி அழுகிறார்கள்.-அறிவிலிகள். இந்த நூற்றாண்டிலேயும் பகுத்தறிவு வளர வில்லை. என்ன சொல்லி என்ன பலன்?
ராஜ நாகம் காணொளியை முழுமையாக பாருங்கள் ..உண்மையைமட்டும் பகுத்தறிந்து எடுத்துக்கொள்ளுங்கள் ..
தமிழுக்கு சாதி கிடையாது–தமிழனுக்கு ? இந்து தமிழர்கள் தான் சாதியை கட்டி அழுகிறார்கள்… abraham terah.. Anwar Deen… அவர்கள் சொல்வது பொய்யா ? இந்து என்றால் உங்களுக்கு இளக்காரமா? அடுத்தவன் மதத்தை மட்டம் தட்ட நீங்க யாரு? ஒரு இந்து உங்களை திருப்பி கேடடாள்?
சாதியம் பேசியே நம் தமிழர்கள் வீணாகி போகின்றனர். மதம் மாறினால் தங்களுக்கு எல்லாம் கிடைத்து விடும் என்று நம்புவது அறிவீனம். இந்த தலித் மக்களை நன்றாக ஏமாற்றி மற்ற மதத்தினர் அவர்களின் மதத்தில் சேர்க்க முயல்வது கபடமான செயல். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போல் மதம் மாறியதும் தாம் ஏமார்ந்த்து தெரிய வரும். மற்ற மதத்தினர் உண்மையில் அவர்களுக்கு எந்த மத லாபம் கருதி உதவினால் அது நற்செயல் ஆகாது.
மனிதனுக்கும் சாதி உண்டு , மிருகத்திருக்கும் சதி உண்டு என்று சொல்லி பல உதாரணங்களை காட்டியது யார் மன்னா? ஞாபகம் இல்லையா . இல்லை உங்க வசதிக்காக மறந்து விட்டிர்களா? ஊருக்கு உபதேசம்…
யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். இதற்கு பல்லை இழித்து குறித்த தமிழர்கள் மாடு போல தலை ஆட்ட , சிங்கள ராணுவம் தேரை இழுத்துள்ளது.
இங்கே இச்சம்பவத்தை பார்க்க ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. 2009ம் ஆண்டு மே 18 க்குப் பின்னர் கொத்துக் கொத்தாக பல மக்கள் சென்று ராணுவம் அமைத்த தற்காலிக முகாம்களில் தங்கினார்கள் அல்லவா ? அந்த வேளைகளில் அங்கே மதிய உணவு சமைக்கப்படுவது வழக்கம். ஒரு சமைக்கப்பட்ட மதிய உணவு பெரும்பகுதியாக மிஞ்சி இருந்தது. பலர் அதனை உண்ணவில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பிப் போன ராணுவ அதிகாரி ஒருவர் ஏன் உங்களில் பலர் இன்று சாப்பிடவில்லை என்று கேட்க்க. “பின்ன சாதி குறைஞ்ச ஆளை சமைக்க விட்டா நாங்கள் எப்படி சாப்பிடுவது” என்று மக்கள் பதில் கூறியுள்ளார்கள். உடமையை இழந்து , உறவை இழந்து வீட்டை இழந்து , சிங்கள ஆமி காரன் காம்பில் இருந்த வேளை கூட இவர்கள் ஒற்றுமையாக இல்லை. அங்கேயும் சாதி பார்த்திருக்கிறார்கள்.
இதற்கு ஆமி அதிகாரி ஒன்றைச் சொன்னாராம். நான் உங்கள் தலைவரை(பிரபாகரனை) இதுவரை பார்த்ததே இல்லை. ஆனால் இவ்வளவு காலம் உங்களை எல்லாம் அவர் கட்டி பாதுகாத்துள்ளார் என்று அது பெரிய விடையம் தான் என்று. அவர் கூறினாராம் …. இப்படி இருக்கிறது இன்றைய தமிழர்களின் நிலை. நன்றி அதிர்வு
இப்படி இருக்கு ஈழத்தமிழனனின் லச்சணம் .. தமிழர்கள் என்றால் ஈழத்தமிழன் தானாம் . வெட்டி வீராப்பு
இஸ்லாம் மதத்தை தழுவிய மலாய்க்காரர்கள் தன் இனத்தை இழந்து விடாமல் ,மதத்தை மட்டும் தழுவி கொண்டு மலாய் காரர்கலாக வாழ வில்லையா !! சீனர்கள் கிறிஸ்துவ மதத்தையும் ,பவுத்த மதத்தையும் தழுவி சீனர்களாக வாழ வில்லையா !கிறிஸ்துவத்தையும் , இஸ்லாத்தையும் தழுவிய தமிழர்கள் தமிழர்களாக தான் வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள் !! மசூதியில் தமிழில் தொழுகை நடக்கிறது !! தேவாலயங்களில் தமிழில் ஆராதனை நடக்கிறது !! இந்துக்கள் தான் ஜாதியை ( எழுதவே கூசுகிறது ) கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள் ! எழிதினால் ஜாதி !!,பேசினால் ஜாதி !! 1978 இல் மலாயா பல்கலை கழகத்தில் , இலைஜெர் விளையாட்டு அமைச்சின் சார்பாக ( அது ஒரு பொற்காலம் ) சிறு கதை கருத்தரங்கம் நடந்தது !! ச .ஆ .அன்பானந்தன் , DR . பூபாலன் , போன்ற மலேசியா தமிழ் மேதைகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் ! பேராசிரியர் சிங்காரவேலு , DR . தண்டாயுதம் !! திரு . தண்டாயுதம் அவர்கள் மண்ணின் மனம் கமழும் சிறு கதைகள் தொட்டு பேசும் போது , திராவிட கழக பிரதி நிதிகள் ஜாதி ஒழிப்பு அடிப்படையில் சிறுகதை கல் வருவதில்லை என்று அவர்களின் கருத்தை வெளியிட்டனர் ! DR . இரா. தண்டாயுதம் அவர்கள் ! ஜாதியை பேசாமலும் அதை எழுதாமலும் இருந்தால் !! அது தானாக செத்து விடும் என்றார் !! அரசியல் வளர்த்து விட்டது ஜாதி !! தமிழன் கூலியாக , தோட்டத்தில் இருந்த போது ஜாதியும் கிடையாது !! தமிழன் ! தெலுங்கன் ! மலையாளம் ! என்ற பாகு பாடும் கிடையாது! ஒரே பள்ளி தமிழ் பள்ளி ! ஒரே மொழி தமிழ் மொழி !
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டியூஷன் ஆசிரியராக இருந்த கரீம்(60) என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த ரம்ஜான் பண்டிகையன்று அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் கரீம் என்ற மதகுருவோ.., ‘நான் அந்த பெண்ணை கடத்தி வரவில்லை. எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. இவளை எங்கள் அன்பளிப்பாக உங்களிடம் ஒப்படைக்கிறோம். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் அவளை அழைத்து செல்லலாம்’ என அவளது பெற்றோர் கூறியதால் நான் எனது ஊருக்கு அழைத்து வந்தேன்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த மதகுருவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பேரகுழந்தையை திருமணம் செய்தானா ? அறுப்பதிலும் உடல்சுகம் கேட்க்கிதோ ! ராமசாமி நாய்க்கேன் வகையறாக்கள் ..http://www.athirvu.com/6-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/
எழுச்சிபறையா அவனாலே முடியுது கட்டாய திருமணம் செய்துக்கிறான் நீயும் அவன் வழியை பின்பற்று யாரு வேணாம்ன்னு சொல்றாங்க
அன்று எந்த மலாய்காரங்களும் தலையில் முக்காடு போடுவதில்லை. இன்று முக்காடு போடாத மலைய்காரங்க இல்லை .. முகத்தை மூடுவது மலாய்காரங்க கலாச்சராம் இல்லை . காக்க மாஹாதிர் வந்த பிறகு இறங்கிய அரபு கலாச்சாரம். மலாய்காரங்கலா இருந்திருந்தா கோவில் உடைப்பு நடந்து இருக்காது . நம்மவர்களை வந்தேறி என்று சொல்லி இருக்க மாட்டாங்க, ஏனென்றால் அவர்கள் ரொம்ப நல்லவர்கள். அன்று உள்ள மலாய்காரங்க இன்று இல்லை .இன்று மதம் அவர்களை ஆட்டி படைக்குது . சமீபத்தில் ஒரு அன்பர் இங்குள்ள பல தமிழ் முஸ்லிம் தமிழர்கள் இல்லை. அவர்கள் தங்களை மலாய்காரங்க மாதிரி இருப்பதையே விரும்புகிறார்கள். அதனால் அன்று காக்க மாகாதிர்டம் தங்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து கொடுக்குமாறும் இன்றும் அதை அவர்கள் வற்புத்துராங்கனும் சொல்லிருந்தார்.எவ்வளவு உண்மை .அன்று தெலுங்கன், மலையாளம் பள்ளிகள் இல்லையா ? கால போக்கில் அது மறைந்தே போயிற்று. அதுக்கான காரணம் தமிழர்கள் என்று சொல்லாதீர்கள் ஒருவரை தூக்கி பேச வேண்டும் என்றால் பேசி கொள்ளுங்க , அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம் . தமிழனுக்கு `மட்டும் ஏன் சாதி இருக்கு கூடாது ? தெலுங்கன் மலயாளிக்கு இருக்கு .ஏன் சிங், வடநாட்டவாங்க சாதி இல்லையா? . மலேசியாவில் அவர்கள் தமிழர்களை விட வளமா இருக்காங்க.. சாதி அவர்களை நல்ல தானே வைத்துருக்கு.. இதில் யாரோடு தப்பு? ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல் என்றானாம்.. அவர் அவர் சாதி அவருக்கு பெருமை. இதிலே மற்றவர் சாதிய குறை சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. தமிழனுக்கு எப்போதும் ஒரு நல்ல பழக்கம் இருக்கு . தாம் முன்னேறமா இருக்க எதாவது ஒரு வழி கண்டு பிடிச்சிகிட்டே இருப்பான்.
ஐயா ராஜ நாகம் அவர்களே– மற்றவர்களுக்கு சாதி இருந்தால் நாமும் அதை பின்பற்ற வேண்டுமா? சாதியினால் நாம் அழிகிறோம்– இது தேவையா? நமக்கு சுய மரியாதை தேவை இல்லையா? இந்தியாவில் சாதி எல்லா நிலையிலும் ஊன்றி விட்டது– அது ஒழிந்தால்தான் அந்த நாடு உருப்படும். அங்கு ஒருவருக்கு சாதி தொல்லை இருந்தாலும் அது வரவேற்க தக்கதல்ல.
ராஜநாகம் சொல்வது முற்றிலும் உண்மையே. ஜாதியை வைத்து பிரச்னை பண்ணாமல் நாம் யாவரும் தமிழர், இந்தியர் என்று செயல் பட்டாலே நாம் முன்னேறிவிட முடியும். அதைவிடுத்து நம் சக இந்தியரை அருவருக்கத் தன்மையாக பேசுவது மதியற்றவர் செயல்.
அன்பர் en thaai thamizh…… சாதியினால் நாம் அழிகிறோம். எப்படி என்று சொல்லுங்க . சாதியினால் மற்ற இனம் வாழும் போது நாம் ஏன் அழியுனும்? காரணம் ஒரு சாதிய பற்றி இன்னொரு சாதி கொண்டுள்ள துவேசம், வெறுப்பு. இதனால் அழிவது சாதி இல்லை . தமிழ் இனம். ஒரு சாதி இன்னொமொரு சாதியை மதித்தாலே போதும். மனிதன் உள்ள வரை சாதியயை அழிக்க முடியாது , அழிக்கவும் கூடாது. மற்ற இனம் நல்ல இருக்காங்க என்று பொறமை படுவதை விட எப்படி என்று பாருங்க . அவர்களுடம் சாதி இருந்தாலும் ஒறுமையாக வளமாக இருக்காங்க.. சாதி ஏன் வேண்டும் என்று மன்னன் ஏற்கனவே அழகா சொல்லிருந்தார் ..
ஐயா ராஜ நாகம் அவர்களே– நீங்கள் எத்தனை வெளி நாடுகளுக்கு போய் இருக்கிறீர்கள்? நான் யாரையும் சாட விரும்ப வில்லை. தயவுசெய்து ஜாதியை கட்டி வைத்துக்கொள்ளுங்கள்– எனக்கு அது தேவை இல்லை -அதன் பக்கமே நான் போக மாட்டேன். இதற்க்கு மேல் ஏதும் கூற விரும்ப வில்லை.
ஐயா en thaai thamizh நீங்கள் உலகம் சுற்றும் வாலிபரா இருங்கள் . நான் ஒன்றும் தெரியாதவனா இருந்து விட்டு போகிறேன் . சாதி உங்களுக்கு தேவை இல்லை என்று சொல்லி தயவு செய்து எந்த சாதியையும் குறை சொல்லாதீர்கள்.. சாதி இல்லைனு சொல்றவன் தான் தமிழ் சாதிகளை தர குறைவாக பேசுறான்
ராஜ நாகம் அவர்களே ( en thaai thamizh ) இவருதான் ஐயா திருவள்ளுவர் .இத பத்தி அவரு சொல்லவே இல்லையா ?? இவர்தான் திருவள்ளுவரையும் திரு குரலையும் கண்டு பிடிச்ச பிசாசு ஐயா ,,!
இன்றைய பங்களாதேஷ் ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்தது …கேவலம் கெடட ஜாதி பிரச்சினைகளினால் ….முதலில் புத்தமதம் மாறி ..பின்னர் முஸ்லிம்கள்களாக மாறினார்கள் …சும்மா சொல்ல கூடாது இந்த 21m நூற்றாண்டில் கூட ஜாதி சர்டிபிகேட் (செம்மொழி ) கொடுக்கும் ஒரே நாடு உலகில் இந்த பிச்சைக்கார இந்தியா தான்
இந்து சனாதன தர்மம் பேசும் நாடும் இந்தியா என்பதை மறந்து விடாதீர்கள்.
கிண்டலுக்கும் மட்டம் தட்டுதலுக்கும் மிக்க நன்றி. பகுத்தறிவு உள்ளவர்களுக்கு சிந்திக்க தெரியும். கிணற்று தவளையாக நான் எப்போதும் இருக்க மாட்டேன். கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு இதை நான் என்றோ தெரிந்து கொண்டேன்.
அட இன்னமும்மா சாத்தியம் பற்றி வாதம்? உண்மை எப்படியோ. சாத்தியமும் அப்படியே. அதை அப்படியே விட்டு விட்டு நாம் மாந்தர் என்ற உண்மையுடன் தெளிந்த அறிவுடன் யாவரும் ஒற்றுமையாக வேற்றுமை பாராட்டாமல் செயல் படுவோமே. அதே சமயம் நம்மில் யாராயினும் சிறந்த பண்பு மிக்கவர் என்றால் பாராட்டுவோம். வாழ்க இந்திய வம்சாவளி
எல்லாம் சரி தான்! ஏன் அங்கே இங்கே எல்லாம் தேடி ஓடுகிறீர்கள்! நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்!
பழங்கள்ளிமேடு மக்கள் மதம் மாறுவதாக சொல்லவில்லை…பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வது, அர்ச்சனை செய்வது, உபயம் செய்வது, குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எல்லாம் அந்த கோவிலில்தான்…..அவர்கள் கேட்டது அந்தக் கோவில் திருவிழாவில் ஒருநாள் உபயம் மட்டுமே……..அதுதான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ……இதற்குள் அந்த கிராமத்தில் உள்ள நான்கு விடுதலை சிறுத்தை ஆட்கள் அந்த கிராமத்து ஜனங்களை நாகூரில் உள்ள தவ்ஹீத் ஜமாத் ஆட்களிடம் பெரும் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் மதம் மாற நினைக்கிறார்கள் என்று கூறி அந்த மக்களை விற்கப்பார்த்துள்ளார்கள்…அதி நம்பி நாகூர் தவ்ஹீத்து நாக்கில் எச்சில் ஊற அங்கு சென்றது.அந்த மக்கள் தவ்ஹீத் மூக்கை அறுத்து அனுப்பிவிட்டனர்…இபோது தவ்ஹீத் பெரும் பணம் வாங்கிய சிறுத்தைகளை தேடிகிட்டே இருக்குறாங்கலாம்……..