பாகிஸ்தானில் நடந்த சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார்
அறிக்கை மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளித்துப் பேசிய ராஜ்நாத் சிங், தூர்தர்ஷன், ஏ.என்.ஐ., பி.டி.ஐ. செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனது உரை இருட்டடிப்பு செய்யப்பட்டது உண்மைதான். பாகிஸ்தான் என்ன செய்ய நினைத்ததோ, அதை செய்தது. நான் அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் நாட்டின் பெருமையைப் பாதுக்காக்க வேண்டியது முக்கியமாகும். கூட்டம் முடிந்ததும், உள்துறை அமைச்சர் என்னை விருந்துக்கு அழைத்தார். அழைப்பு விடுத்த பின்னர் உடனே காரில் ஏறிச் சென்றுவிட்டார். இந்தியாவின் மானத்தை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன். மதிய உணவு சாப்பிட நான் செல்லவில்லை என்றார். இதனைத் தொடர்ந்து மக்களவையிலும் ராஜ்நாத் சிங் தனது அறிக்கையை அளித்தார்.
-http://www.nakkheeran.in
போடா வெங்காயங்களா– உங்களுக்கு மானம் ஈனம் கிடையாது– வெறும் பேச்சுதான்– இந்தியாவை யாருடா மதிக்கிறார்கள்.?