கேரள மாநிலம், கண்ணனூர் அருகே ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் முஸ்லீம் மத போதகர் முகமது ஹனீஃப்பை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில்: கேரளத்தில் கடந்த 8ம் திகதி 21 பேர் காணாமல் போயினர். அவர்களில் 17 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 4 பேர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். காணாமல்போனவர்களில் 4 பெண்களும், 3 சிறார்களும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த 21 பேரில் 11 பேருக்கு மத வகுப்புகளை முகமது ஹனீஃப் எடுத்தது தெரியவந்தது.
எனவே, அவருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவருக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருக்கும் என்ற முடிவுக்கு தற்போது வரமுடியாது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com