காவிரி பிரச்சனையால் கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட செழுவழி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நாளை பெங்களூரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். இதில் கன்னட வேதிகே, ஜெய் கன்னட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இப்பிரச்னையின் காரணமாக, தமிழகம்-கர்நாடகா இடையே, இன்று 13வது நாளாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் போராட்டம் தீவிரமடைவதால் இரு மாநில எல்லையிலும் துணை ராணுவத்தினர், பொலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-http://news.lankasri.com
கடல் நீரை குடியுங்கள் என்று சொல்கின்றான் இந்த கோமாளி சுப்ரமணிய சாமி …இது தகர தமிழர்களை அவமதிக்கும் கூற்று ..எங்கே ..உலக தமிழர்க்காவலன் ..நடமாடும் பிணம் ?கேவலம் இன்றுவரை இந்திய பிரதமர் தமிழர்களை தாக்க படடதை கண்டிக்கவில்லை ..சிவசேனா கூட தமிழா நாட்டில் கன்னடர்கள் தாக்க படடதை எதிர்க்கின்றது ..ஆக இந்த தகர தமிழா நாட்டு அடிமைகளை எவரும் மதிப்பதில்லை ..இந்த அழகில் நாங்கள் இந்தியர்கள் என்ற கூவல்
இந்தியா அரசே கலவரம் செய்பவர்களை சீனாவை போல் இரும்பு கரம் கொண்டு அடக்கி அப்பாவிகளை காப்பாற்று. அதை விடுத்து பேடித்தனமாக செயல் பட்டு அப்பாவி மக்கள் உயிர் இழக்க காரணமாகி விடாதே.