பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.
காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு மீண்டும் வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களை ஆதாரத்துடன் மேற்பார்வை குழுவிடம் அளிக்கப்பட்டது. 20 முதல் 30ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து விட மேற்பார்வைக்குழு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றமோ வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது என சித்தராமையா கூறினார். மேலும், கர்நாடகத்தில், தண்ணீர் இல்லை என்று தலைமை செயலர் உட்பட உயர் அதிகாரிகள், காவிரி கண்காணிப்பு குழு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து கூறினோம்.
ஆனால், இதுபோன்ற தீர்ப்பு வந்துள்ளது. எனவே, மக்களும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும். யாரும் வேதனைபடக்கூடாது. விவசாயிகள் நலன் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை முதல் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக நாளை மாலை 5 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதில், பா.ஜ.க., ம.ஜ.த., ஆகிய எதிர்க்கட்சிகளும், கர்நாடகாவின் ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்களும், காவிரி நீர்ப்பாசன பகுதி எம்.எல்.ஏ., க்கள், எம்.எல்.சி., க்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சித்தராமையா.
அப்படி போடு ..இனியாவது இருக்கும் உண்மை தமிழர்களுக்கு சூடு சுரணை மானம் வெட்கம் வருமா என்று பார்ப்போம் …நடமாடும் பிணம் கர்நாடகாவில் உள்ள தன மகளின் பாதுகாப்பை உறுதி செய்தான் அங்குள்ள தமிழன் பாவாடை .சுடலை காலை பற்றி இவனுக்கு கவலை இல்லை …
அட நம்ம நாட்டு IGP-யின் கொள்கைகளை தவறாமல் கடை பிடிப்பவர் போலிருக்கு