டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. ஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜக அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை.
18 ஆண்டுகாலம் மத்திய அரசில் பங்கேற்ற திமுகவும் எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக மேற்கொள்ளவும் இல்லை. உச்சநீதிமன்றமே காவிரி வழக்கில், 4 நாட்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் முதலில் இதற்கு ஒப்புக் கொண்டது.
ஆனால் தமிழகத்துக்கு துரோகம் செய்தே பழக்கப்பட்டுப் போன மத்திய அரசு திடீரென மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. இது தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது.
இந்த எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இன்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாடியது. இதனை வேறுவழியே இல்லாமல் உச்சநீதிமன்றமும் ஏற்று மேலாண்மை வாரியத்தை அமைக்க பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…
தமிழகத்தை தமிழன் ஆட்சி நடத்த வில்லை, த்மிழக தமிழனிடம் ஒற்றுமையும் இல்லை. இனி இப்படிதான் அல்லல் பட்டு அவதிப்பட்டும் அசிங்கப்பட்டும் அவமானம் படவேண்டியதுதான்.
“தமிழகம் என்ற பேரை அழித்துவிட்டு , தமிழ் நாட்டை கர்நாடகம் , ஆந்திரா, அல்லது கேரளத்துடன் இணைத்துவிட்டாடால் தமிழ் நாட்டவருக்கு எந்த பிரச்சனையும் வராது. இதுவே எனது இறுதி தீர்ப்பு”
– வெட்கங்கெட்ட தமிழ் நாட்டு தமிழ் மக்கள்.
மறுபடியும் முதலில் இருந்தா……
திராவிட நாடு மீண்டும் உதயம் அப்படினா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
திராவிடம் காப்பது கடமையடா
என்ற பாடலும் மறுவடிவம் பெறும் ஓகே ஓகே
நீங்கள் பேசுவது தவறு. கர்நாடக அரசு அங்குள்ள மக்களை தமிழ் நாட்டுக்கு எதிராக தூண்டி விடுகிறது. தமிழகத்தில் தமிழக அரசு தமிழர்களைத் தூண்டி விடும் நிலைமையில் இல்லை. தமிழ் நாட்டில் ஜெயலலிதா வாய்திறக்கமால் அ.தி.மு.க. காரன் வாய்திறக்க மாட்டான். கருணாநிதி வாய்திறக்காமல் தி.மு.க. காரன் வாய்திறக்கமாட்டான். தமிழன் வாய்திறந்தால் அவனை போலீஸ் ஜெயிலில் போடுகிறது. ஆக தமிழன் மாநிலத்திலேயே தமிழன் தகர டப்பா வாழ்க்கை வாழ வேண்டிருக்கிறது! அதனால் தான் தமிழனை ஆள சீமான் வர வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
தகர தமிழா நாட்டு தமிழர்களை மாநிலமோ ..மத்திய அரசோ என்றும் மதிப்பதில்லை …இங்குள்ள தலைவர்களை ..வாங்கலாம்..விற்கலாம் ..வாடகைக்கு எடுக்கலாம் ..ஈன பிறவிகளுக்கு ஒரு மாநிலம் எதட்கு?
இன்று வரை இந்த நடமாடும் பிணம் ..கர்நாடக அரசுக்கு ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை ..அனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு …வெட்கம் கெடட பிறவிகள் …இன்னும் இவனுக்கு பல்லக்கு தூக்குகின்றன
“தமிழகம் என்ற பேரை அழித்துவிட்டு , தமிழ் நாட்டை கர்நாடகம் , ஆந்திரா, அல்லது கேரளத்துடன் இணைத்துவிட்டாடால் தமிழ் நாட்டவருக்கு எந்த பிரச்சனையும் வராது. இதுவே எனது இறுதி தீர்ப்பு”
தமிழர் தமிழனாக வாழத் தெரியாத போது அவருக்கு எதற்கு தமிழ் நாடு? சரியான தீர்ப்பு.
தமிழ் நாட்டை தமிழன் ஆளாளதுபோலவும் காவிரி பிரச்னை இப்பொழுதுதான் ஆரம்பிச்ச மாதிரியும் பேசுறீர்கள். தமிழன் ஆட்சியின் அவலங்கள்தான் இந்த காவிரி பிரச்னை மற்றும் இன்றைய அரசின் இலவச திட்டங்கள். தமிழன் ஆட்சிக்கு பிறகுதானே திராவிடன் ஆட்சி வந்தது. தமிழன் ஆட்சியிலே ஏன் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. அன்று தமிழன் ஆட்சியிலேதானே இலவச திட்டங்கள் அறிமுகம் கண்டது. இன்றைய தமிழ் நாட்டின் அரசியல் அலங்கோலத்திற்கு காரணமே திறமையற்ற அன்றைய தமிழனின் ஆட்சிதான்.
நண்பரே! தமிழ் நாட்டை தமிழன் ஆண்ட போது காவேரி பிரச்சனை இல்லை. அவர்கள் ஆட்சியின் போது இலவசங்கள் இல்லை. ஒரே குறை. அவன் அன்று எல்லாரும் இந்தியர் என்று நினைத்தான். ஆனால் மற்ற மாநிலத்தவர் அப்படி நினைக்கவில்லை!
இந்நிலையும் மாறும். எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாக நடக்கும். அதுவரை தகர தமிழனே இலவசத்திற்கு அலைவாயாக.
ஒன்றை மறந்து விட்டீரே நண்பரே! தண்ணீருக்காக கர்நாடாகாவையும், கேரளாவையும், ஆந்திராவையும் இலவசத்திற்கு அலைவாயாக!
கொடுக்காமல் எங்கே போகப் போகிறார்கள். நண்பரே. இந்தியாவை பொறுத்தவரை ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாதோ அது போன்றே ஒவ்வொரு மாநிலமும் மற்றதை சார்ந்தே இருப்பது என்பது விதி. இன்னார் செய்தாரை அவர் நாண நன்னயம் செய்து விடேல் .
வெங்காயம் –வேறு என்ன சொல்ல?
விதியை உன் வீட்டோடு வச்சிக்கோ! தமிழன் இழந்த அனைத்து நிலங்களை மீட்டா போதுமானது.எல்லா வளங்களும் தமிழ் மண்ணில் உள்ளது! நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும்!!! மதி கெட்டவனுக்குத்தான் விதி வேலை செய்யும்!!!
புளித்த கேசரி , உன் அறியாமையை தான் யாவரும் அறிவாரே. உன் போன்ற கயவர்களால் தான் நம் இனம் இப்படி அசிங்கப் பட்டு நிற்கிறது.
மதி கெட்ட மன்னா! தமிழர் நாடு தமிழர் ஆட்சி! இனி வந்தேறிகளுக்கெல்லாம் புளித்த கேசரி மட்டும்தான் மிஞ்சும்!!!
மன்னரே! நீங்கள் சொல்லுவது சரியே! எல்லா மாநிலங்களும் மற்றவைகளை சார்ந்தே இருக்கின்றன என்பது உண்மையே! ஆனால் விதிவிலக்கு உண்டு. தமிழ் நாடு தனது வளங்களை மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தமிழக திராவிட ஆட்சியாளர்களின் கட்டாயம். ஆனால் மற்ற மாநிலங்கள் தங்களது வளங்களை தமிழகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது மற்ற மாநிலங்கள் கடமையாகக் கருதுகின்றன! இதுவும் கடந்து போகும்!
அப்படியானால் நீதி அங்கும் அரசியல் வாதிக்கு அடிமையே.