கர்நாடக அரசு காவிரி நீர் திறப்பை சத்தம் போடாமல் நிறுத்தியுள்ள சம்பவம் தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது இருக்கும் நீர் மாநில குடிநீர் தேவைக்கே போதாது என கர்நாடக தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன.
இதனையடுத்து, கர்நாடக அரசு நீர் திறக்க சம்மதித்தது. பிறகு தங்கள் மாநிலத்தில் போதுமான மழை பெய்யவில்லை தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீருக்கு மட்டும்தான் உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று எச்சரிக்கை செய்தது.
பின்னர், காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசு. தற்போது திடீரென மீண்டும் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியுள்ளது.
இதற்கு, தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்டோம்.
-http://news.lankasri.com