சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் 100ற்கும் மேற்பட்டோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-http://news.lankasri.com